விடப் போறதில்ல... அடுத்த வருஷம் நான்-ஸ்டாப் விளையாட்டுதான்... தயாராகிவரும் ஹிட்மேன்!
பெங்களூரு: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா, பிட்னஸ் குறைவு காரணமாக என்சிஏவில் பயிற்சி பெற்று வருகிறார்.
இதையடுத்து அவர் கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயினும் அடுத்த ஆண்டு முழுவதும் கிரிக்கெட்டில் தன்னை பிசியாக வைத்துக் கொள்ளும் வகையில் தன்னுடைய உடல் எடையை குறைக்கும் பயிற்சிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

5து கோப்பை வெற்றி
ஐபிஎல் 2020 தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தனது 5வது கோப்பையை கைப்பற்றியுள்ளது. காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்தாலும், தன்னுடைய அணியை சிறப்பாக வழிநடத்தி ரோகித் சர்மா இந்த வெற்றியை அணிக்கு பெற்றுத் தந்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடிப்பு
இதனிடையே, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் முதலில் ரோகித் பெயர் இடம்பெறாமல் இருந்தது. அதற்கு காரணமாக அவரது காயம் குறிப்பிடப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது பட்டியலில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ரோகித் இடம்பெற்றார். ஆயினும் அவரது பிட்னசை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது.

10ம் தேதி பிட்னஸ் டெஸ்ட்
70 சதவிகிதம் பிட்னஸ் மட்டுமே ரோகித்திற்கு உள்ளதாகவும் வரும் 11ம் தேதி அவருக்கு பிட்னஸ் டெஸ்ட் எடுக்கப்பட உள்ளதாகவும் பிசிசிஐ மற்றும் என்சிஏ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னுடைய பிட்னசை நிரூபிக்கும் வகையில் அவர் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

பிட்னஸ் பயிற்சிகளில் ரோகித்
மேலும் தன்னுடைய உடல் எடையை குறைக்கும்வகையில் அவர் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டில் தன்னை மிகவும் பிட்டாக வைத்துக் கொண்டு தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கும் வகையில் அவர் என்சிஏவில் பயிற்சி செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications