Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தீர்க்கப்படாமல் உள்ள 3 முக்கிய பிரச்சினை.. பதில் தெரியாமல் தவிக்கும் ரோகித் சர்மா.. என்ன நடந்தது?

நாக்பூர்: ஆஸ்திரேலியா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான ப்ளேயிங் 11ல் தீர்க்கப்படாமல் உள்ள 3 முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாக பேசியுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டி நாளை நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டிக்காக கடந்த ஒரு வார காலமாகவே இரு அணிகளும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்த சூழலில் தற்போது ப்ளேயிங் 11ல் தேர்வில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இந்திய அணியில் 3 முக்கிய குழப்பங்கள் உள்ளன.

 ஆஸ்திரேலிய டெஸ்ட்

ஆஸ்திரேலிய டெஸ்ட்

நட்சத்திர வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இல்லாததால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பெரும் அடிவாங்கியுள்ளது. பண்ட்-க்கு விபத்து ஏற்பட்ட சூழலில் ஸ்ரேயாஸ் ஐயர் 2வது டெஸ்டிற்கு தான் வரவுள்ளார். இதனால் யார் கீப்பர் பொறுப்பை ஏற்பார்கள் என்ற கேள்வி உள்ளது. இதற்காக இஷான் கிஷான் மற்றும் கே.எஸ்.பரத் ஆகியோர் இடையே போட்டி நிலவி வருகிறது.

மிடில் ஆர்டர் சிக்கல்

மிடில் ஆர்டர் சிக்கல்

மிடில அர்டரில் ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்திற்கும் போட்டி நிலவுகிறது. அதாவது சுப்மன் கில்லை மிடில் ஆர்டருக்கு கொண்டு வருவார்களா? அல்லது சூர்யகுமார் யாதவ் அறிமுகமாவாரா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இதே போல பவுலிங்கில் அஸ்வின் மற்றும் ஜடேஜா முதன்மை ஸ்பின்னர்களாக உள்ள சூழலில் 3வது ஸ்பின்னராக குல்தீப் யாதவா அல்லது அக்‌ஷர் பட்டேல் இடையே போட்டி இருந்து வருகிறது.

 ரோகித் சர்மா விளக்கம்

ரோகித் சர்மா விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து ரோகித் சர்மா விளக்கம் தந்துள்ளார். அதில், சுப்மன் கில் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய சதங்களை அடித்தார். மற்றொருபுறம் சூர்யகுமார் யாதவ் விளையாடினால் என்ன தாக்கத்தை கொடுப்பார் என நிரூபித்துவிட்டார். இதனால் யாரை ப்ளேயிங் 11ல் கொண்டு செல்வது என இன்னும் முடிவெடுக்காமலேயே இருக்கிறோம்.

பண்ட் தேவை

பண்ட் தேவை

இந்த இடத்தில் ரிஷப் பண்ட்-ஐ மிஸ் செய்கிறோம். எனினும் அவரின் இடத்தை பூர்த்தி செய்ய சில வீரர்களை வைத்துள்ளோம். அனைத்து பேட்டர்களிடமும் தெளிவாக திட்டத்தை விளக்கிவிட்டோம். நாளைய போட்டியில் அதனை சரியாக செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அஸ்வின் மற்றும் ஜடேஜா ஒன்றாக இணைந்து நிறைய முறை விளையாடியுள்ளனர். குல்தீப், அக்‌ஷர் ஆகியோர் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தியுள்ளனர். இதனால் விரைவில் முடிவெடுப்போம் என ரோகித் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, February 8, 2023, 19:05 [IST]
Other articles published on Feb 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+