For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“முன்பே அதை செய்துவிட்டேன்..” பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி??.. இந்திய கேப்டன் ரோகித் முழு விளக்கம்!

துபாய்: பாகிஸ்தான் அணியுடனான போட்டியை வென்றது எப்படி என்பது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

Recommended Video

IND vs PAK போட்டி நடுவே Rahul Dravid, Rohit கொடுத்த Advice *Cricket

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 148 ரன்களை குவித்தது.

சுலபமான இலக்கு

சுலபமான இலக்கு

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். இதன்பின்னர் வந்த வகார் ஜமான் (10), இஃப்திகார் அஹ்மது (28) சதாப் கான் (10) என சொதப்பினர். மறுமுணையில் போராடிய முகமது ரிஸ்வான் 43 ரன்களில் வெளியேறினார். இறுதியில் அணியின் டெயில் எண்டர்கள் ஹரிஸ் ரௌப் 13 (7), தஹானி 16 (6) அதிரடி காட்ட பாகிஸ்தான் 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி சேஸிங்

இந்திய அணி சேஸிங்

இதன் பின்னர் களமிறங்கிய இந்தியா அணிக்கு ஓப்பனிங்கே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் டக் அவுட்டாகி ஏமாற்றினார். மற்றொரு ஓப்பனரான ரோகித் சர்மா 12 ரன்களுக்கு நடையை கட்டினார். எனினும் மிடில் ஆர்டர் பலமாக இருந்தது. விராட் கோலி (35) சற்று நம்பிக்கை கொடுத்தார். பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா (35) ஹர்திக் பாண்ட்யா (33) ஆகியோர் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கடைசி வரை பரபரப்பாக இருந்தது. எனினும் கடைசி நேரத்தில் பாண்ட்யா அதிரடி காட்ட 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா பதில்

ரோகித் சர்மா பதில்

இந்நிலையில் பாகிஸ்தானை வீழ்த்தியது குறித்து ரோகித் பேசியுள்ளார். அதில், இந்த இலக்கை விரட்ட முடியும் என்ற நம்பிக்கை முன்பே இருந்தது. அதற்கு கிடைத்த பலன் தான் இது. ஒவ்வொரு வீரருக்கும் தனி தனி பணிகள் கொடுத்திருந்தேன். அதனை சரியாக செய்தனர். இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர்கள் கடந்த ஓராண்டாக செய்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. அமீரக களங்களை புரிந்துக்கொண்டுள்ளனர் என ரோகித் சர்மா பேசினார்.

பாபர் விளக்கம்

பாபர் விளக்கம்

இதனை தொடர்ந்து பேசிய பாபர் அசாம், நாங்கள் ஆட்டத்தை தொடங்கிய விதம் சிறப்பாக இருந்தது. ஆனால் 10-15 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம். பந்துவீச்சாளர்கள் இப்போட்டியில் மிகச்சிறப்பாக சண்டை செய்தனர். டெயில் எண்டர்கள் ரன்களை குவித்தனர். நவாஸை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றது அழுத்தத்தை போடுவதற்காக தான். ஆனால் ஹர்திக் பாண்ட்யா அதனை முறியடித்துவிட்டார் என பாபர் கூறியுள்ளார்.

Story first published: Monday, August 29, 2022, 8:41 [IST]
Other articles published on Aug 29, 2022
English summary
India vs pakistan match in asia cup 2022 ( இந்தியா - பாகிஸ்தான் போட்டி ) ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை இந்தியா எப்படி வீழ்த்தியது என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+