Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எங்களுக்கே குழப்பமா இருக்கே”.. முதல் டெஸ்டிற்கான இந்திய ப்ளேயிங் 11.. ரோகித் சர்மா வெளிப்படை பதில்!

நாக்பூர்: ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் சூழலில் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

இப்போட்டிக்காக கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதலே இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தனர். எனினும் இந்திய அணி மட்டும் இன்னும் ப்ளேயிங் 11ல் உள்ள குழப்பங்களை தீர்காமலேயே உள்ளது.

ப்ளேயிங் 11 குழப்பம்

ப்ளேயிங் 11 குழப்பம்

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் செயல்பட மாட்டார் என்றும் ஓப்பனராக இருப்பார் என்றும் கூறப்பட்டது. விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் கொண்டு வரப்பட்டால் அணியின் பேட்டிங் ஆர்டரில் சுப்மன் கில் அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரில் யாரோ ஒருவருக்கு தான் வாய்ப்பு கொடுக்கப்படும். ஏனென்றால் ரோகித், ராகுல், விராட் கோலி, புஜாரா, கே.எஸ்.பரத் 5 பேர் உள்ளதால் ஆல்ரவுண்டர்கள் வரிசை அடிபடும்.

பவுலிங் பிரச்சினை

பவுலிங் பிரச்சினை

பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் பிட்ச்-ன் தன்மை ஸ்பின்னர்களுக்கு உதவும் என்பதால் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல் என 4 ஸ்பின்னர்களையும் சேர்க்க ஆலோசனை நடந்து வருகிறது. இப்படி செய்தால் அணியில் ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளர் மட்டுமே விளையாட முடியும். இது ஆபத்தான முடிவாகக்கூட அமையலாம்.

ரோகித் சர்மா விளக்கம்

ரோகித் சர்மா விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மாவே விளக்கம் தந்துள்ளார். அதில், ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வது நிஜமாகவே கடினமாக உள்ளது. அனைவருமே சிறப்பாக விளையாடி தங்களின் இடங்களுக்காக அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் யாரை வெளியேற்றினாலும் சிரமமாக உள்ளது. எனினும் அனைவருமே நல்ல ஃபார்முடன் இருப்பது நல்ல அறிகுறியாக தான் தெரிகிறது.

தயாராக இருங்கள்

தயாராக இருங்கள்

போட்டி நாளின் போது பிட்ச்-ன் நிலைமையையும், அணியின் தேவையையும் பார்த்து வீரர்களை தேர்வு செய்வோம். ஒவ்வொரு பிட்ச்-க்கும் ஒவ்வொரு வகையான வீரர்கள் தேவைப்படுவார்கள். இதனால் அனைவருக்குமே வாய்ப்பு கிடைக்கும். அதற்காக எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும் எனக்கூறிவிட்டோம் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, February 8, 2023, 17:55 [IST]
Other articles published on Feb 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+