Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் டி20ல் இந்திய அணி பேட்டிங்.. ஓப்பனராக மாறிய சூர்யகுமார்.. யாரும் எதிர்பார்க்காத ப்ளேயிங் 11!

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது.

Recommended Video

IND vs WI 1st T20 போட்டி தான் T20 World Cup ஒத்திகை? *Cricket

இரு அணிகள் மோதும் இந்த போட்டி ட்ரினிடாட்டில் உள்ள ப்ரைன் லாரா மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிகோலஸ் பூரண் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஓப்பனிங்கே ட்விஸ்ட்

ஓப்பனிங்கே ட்விஸ்ட்

இந்திய அணியை பொறுத்தவரை ஓப்பனிங்கில் கே.எல்.ராகுல் இல்லாததால், இஷான் கிஷான் அல்லது சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக ரோகித் சர்மாவுடன், ரிஷப் பண்ட் ஓப்பனிங் வீரராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் பவர் ப்ளேவில் நல்ல அதிரடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடுவரிசை வீரர்கள்

நடுவரிசை வீரர்கள்

முதல் விக்கெட்டிற்கு ஸ்ரேயாஸ் ஐயர் - தீபக் ஹுடா இடையே போட்டி இருந்த சூழலில் ஸ்ரேயாஸ் ஐயர் வெற்றி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் களமிறங்குவதால் மிகவும் பலமாக உள்ளது.

பந்துவீச்சு படை

பந்துவீச்சு படை

பந்துவீச்சை பொறுத்தவரையில் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதே போல அவருக்கு மிகவும் பிடித்த பார்ட்னரான அஸ்வினும் வாய்ப்பு பெற்றுள்ளார். இந்த களத்தில் சுழற்பந்துவீச்சுக்கு அதிக ஒத்துழைப்பு இருக்கும் என்பதால் 3வது ஸ்பின்னராக ரவி பிஷ்னாய் களமிறக்கப்பட்டிருக்கிறார்.

2 வேகப்பந்துவீச்சாளர்கள்

2 வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் சீனியர் வீரர் புவனேஷ்வர் குமார் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்து தொடரில் ஹர்ஷல் பட்டேலை விட சிறப்பாக செயல்பட்ட அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 3வது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்ட்யா செயல்படவுள்ளார்.

 ப்ளேயிங் 11 என்ன

ப்ளேயிங் 11 என்ன

ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னாய், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், அர்ஷ்தீப் சிங்

Story first published: Friday, July 29, 2022, 20:41 [IST]
Other articles published on Jul 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+