Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துடனான 2வது டி20... இந்திய ப்ளேயிங் 11 வரவுள்ள பெரும் மாற்றம்.. ரோகித்தே கூறிய பதில்!

நாட்டிங்கம்: இங்கிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியில் இந்திய அணி ப்ளேயிங் 11 குறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார்.

Recommended Video

IND VS ENG | Rohit Sharma-வின் Next Plan | Playing XI Prediction

இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2 வெற்றிகளுடன் இந்தியா கைப்பற்றிவிட்டது.

இங்கிலாந்து மண்ணிலேயே அந்த அணியை வைட் வாஷ் செய்யப்போகும் 3வது போட்டி இன்று இரவு தொடங்கவுள்ளது.

ரோகித் சர்மாவின் பதிவு

ரோகித் சர்மாவின் பதிவு

இதற்கான இந்திய அணியில் இன்றும் பெரும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. இதனை 2வது போட்டியின் போதே ரோகித் சர்மா வெளிப்படையாக கூறிவிட்டார். அதில், பெஞ்சில் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் வீரர்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்போகிறேன். அனைத்து விதமான வாய்ப்புகளையும் பயன்படுத்துவேன். இதுகுறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் பேசவுள்ளேன் எனவும் கூறினார்.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

எனவே அதற்கேற்றார் போல தான் ப்ளேயிங் 11 உருவாக்கப்பட்டிருக்கிறது. ஓப்பனிங்கை பொறுத்தவரையில் விராட் கோலி இன்னும் ஃபார்முக்கு வரவில்லை என்பதால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். மிடில் ஆர்டரில் தீபக் ஹூடா மீண்டும் கொண்டு வரப்படவுள்ளார். இவர்களை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் களமிறங்குவார்கள்.

லோயர் ஆர்டரை பொறுத்தவரையில் ஹர்திக் பாண்ட்யா பக்க பலமாய் இருக்கவுள்ளார்.

 பந்துவீச்சு படை

பந்துவீச்சு படை

பவுலிங் படையில் யுவேந்திர சாஹல் 2 போட்டிகளில் விளையாடிவிட்டதால், இந்த முறை ரவி பிஷ்னாய்-க்கு வாய்ப்பு தரப்படும் எனத் தெரிகிறது. வேகப்பந்துவீச்சில் வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆவேஷ் கான், உம்ரான் மாலிக் ஆகியோர் களமிறங்கலாம். இவர்களுக்கு உறுதுணையாக பும்ரா விளையாடுகிறார். 4வது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்ட்யா இருக்கிறார். இவர் 4 ஓவர்களையும் வீசுவதால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

 ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

ரோகித் சர்மா, விராட் கோலி, தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், ரவி பிஷ்னாய், உம்ரான் மாலிக், ஜஸ்பிரித் பும்ரா, ஆவேஷ் கான்

Story first published: Sunday, July 10, 2022, 12:38 [IST]
Other articles published on Jul 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+