Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கவாஸ்கர் மீது பிசிசிஐயிடம் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா புகார்.. கிரிக்கெட் உலகில் பரபரப்பு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முன்னாள் கேப்டன் கவாஸ்கர் மீது பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கிரிக்கெட் உலகில் மதிக்கப்படும் நபராக இருக்கிறார்.

ஆனால் அண்மை காலமாக கவாஸ்கர் விமர்சனம் செய்யும் போது கடும் கோபத்தை வெளிப்படுத்துகிறார். நேரலையில் பேசும் போதும் செய்தித்தாள்களுக்கு கட்டுரை எழுதும் போதும் கவாஸ்கர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.

rohit sharma sunil gavaskar rishabh pant


அண்மையில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட கவாஸ்கர் ரிஷப் பண்டை, முட்டாள் என மூன்று முறை நேரலையில் கூறியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆனால் கவாஸ்கர் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் என்பதால் அதை பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் விமர்சனம் வரம்பு மீறி செல்வதால் அது வீரர்களுக்கான நற்பெயரை கெடுக்கும் விதத்தில் இருந்தது.

பார்டர் கவாஸ்கர் தொடரில் தொடர்ந்து இந்திய அணி மோசமாக விளையாடுவது குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா 31 ரன்கள் தான் சேர்த்தார். இந்த நிலையில் அந்தத் தொடரின் போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்த கவாஸ்கர் தொடர்ந்து இந்திய அணி மீதும் தன் மீதும் முறையற்ற விமர்சனத்தை வைத்ததாகவும் இது எங்களுடைய மனதை பாதிக்க வைத்திருக்கிறது என்றும் கேப்டன் ரோகித் சர்மா பிசிசிஐ நிர்வாகிகளிடம் புகார் கடிதம் ஒன்றை அளித்திருப்பதாக பி சி சி வட்டார தகவல் தெரிவிக்கின்றது.

இதனால் கவாஸ்கரை பிசிசிஐ நிர்வாகிகள் கண்டிக்கும் வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தி இருப்பதாக தெரிகிறது. எனினும் ரோகித் சர்மா இந்த புகாரை அவரே முன்வந்து அளிக்க வாய்ப்பு இல்லை என்றும் பயிற்சியாளராக இருந்த கம்பீர்தான் இதனை தூண்டி விட்டிருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கவாஸ்கர் எல்லை மீறி வீரர்களை விமர்சனம் செய்தது மட்டுமல்லாமல் பயிற்சியாளரையும் அவர்களிடம் இருக்கும் குழுவையும் சேர்த்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து கேலி செய்தார். இதனால் கடுப்பான கம்பீர்தான் இந்த வேலையை செய்ய மூளை காரணமாக இருக்கலாம் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு இதுபோல் தேவையில்லாத சச்சரவுகள் தொடர்ந்து எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 27, 2025, 23:00 [IST]
Other articles published on Jan 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+