For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“கிரிக்கெட்ட கவனிக்கவே மாட்டீங்களா”.. பிட்ச் குறித்து ஆஸி, வீரர்களின் புகார்.. ரோகித் தரமான பதிலடி!!

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பிட்ச் குறித்த சர்ச்சை சூடுபிடித்துள்ள சூழலில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தரமான பதிலடியை கொடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை முதல் நாக்பூரில் உள்ள மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தான் தீவிரமாக நடந்து வருகின்றன.

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் என்றாலே வழக்கமாக சர்ச்சைகளும், குற்றச்சாட்டுக்களும் எழுவதும் வழக்கம் தான். ஆனால் இந்த முறை போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே பிட்ச்-ஐ வைத்து சர்ச்சை எழுந்துள்ளன.

பிட்ச் குறித்த சர்ச்சை

பிட்ச் குறித்த சர்ச்சை

இந்திய அணியில் வழக்கத்தை விட அதிகம் டேர்ன் ஆகக்கூடிய பிட்ச்-களை தருவதாகவும், பயிற்சி போட்டிகளின் போது மட்டும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதாக கொடுத்து ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதற்கு ஏற்றார் போலவே நாக்பூர் பிட்ச்-ஐ கடைசி நேரத்தில் டிராவிட் மாற்றக்கூறியுள்ளார். இதனால் பிட்ச்-ன் மையப்பகுதியில் மட்டும் அதிக தண்ணீர் விட்டு மாற்றி வருகின்றனர்.

ரோகித் சர்மா விளக்கம்

ரோகித் சர்மா விளக்கம்

இந்நிலையில் இந்த விவாதங்கள் குறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார். அதில், பிட்ச்-களை மாற்றுவது குறித்து பேசிக்கொண்டு இருக்காமல், கிரிக்கெட்டின் மீது மட்டும் கவனம் செலுத்திக்கொண்டு அடுத்த 5 நாட்கள் செயல்பட்டால் நன்றாக இருக்கும். பிட்ச்-ஐ குறித்து கவலைப்பட அங்கு ஒன்றுமே இல்லை. கடந்த முறையும் இதே போன்ற குற்றச்சாட்டுக்கள் தான் முன்வைக்கப்பட்டன.

பிறகு என்ன பிரச்சினை

பிறகு என்ன பிரச்சினை

22 தரமான வீரர்கள் தான் இங்கு விளையாடுகின்றனர். பின்னர் எதற்காக பிட்ச் எப்படி இருந்தால் என்ன பிரச்சினை. எப்படி திரும்பும், எந்த அளவிற்கு வேகமாக இருக்கும் என கவலையே படாதீர்கள். சாதாரணமாக வாருங்கள், நல்ல கிரிக்கெட்டை விளையாடுங்கள், வெற்றி பெறுங்கள். அவ்வளவு தான் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

திட்டம் தேவை

திட்டம் தேவை

முதலில் ஒவ்வொரு களத்திற்கும் சரியான திட்டத்தை கண்டறிந்து அதற்கு தகுந்தார் போல செயல்பட வேண்டும். சிலருக்கு ஸ்வீப், சிலருக்கு ரிவர்ஸ் ஷாட், அதிரடியாக ஆடுவது, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஆடுவது போன்று பல வித்தியாசமான திட்டங்களை கேப்டன்கள் செயல்படுத்தி பார்ப்பார்கள். எனவே பிட்ச்-க்கு தகுந்த திட்டம் இருக்க வேண்டும் என ரோகித் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, February 8, 2023, 16:07 [IST]
Other articles published on Feb 8, 2023
English summary
Team India captain Rohit sharma gives strong reply to the Controversies over Indian pitches ahead of 1st Test match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+