இனி நீங்க தான் பார்த்துக்கனும்.. விராட் கோலிக்கு ரோகித் கொடுத்த புதிய பொறுப்பு.. சரி வருமா ?
துபாய் : டி20 உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், இந்திய அணியில் முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு, தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் புதிய பொறுப்பு ஒன்றை தந்துள்ளனர்.
கொஞ்சம் கடினமான பொறுப்பாக இருந்தாலும், விராட் கோலி இந்த சவாலை ஏற்று கொண்ட அதற்கான பயிற்சியையும் தொடங்கிவிட்டார்.

கோலியின் மறு உருவம்
2011 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனி எடுத்த தைரியமான முடிவை தான் தற்போது ரோகித் சர்மா 11 ஆண்டுகளுக்கு பிறகு எடுத்து இருக்கிறார். விராட் கோலியை ஒரு பேட்ஸ்மேனாக தான் நமக்கு தெரியும். ஆனால் அவர் ஒரு மிதமான வேகத்தில் வீசக்கூடிய பந்துவீச்சாளர் என்பதை பலரும் மறந்து இருக்கலாம். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை விராட் கோலி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

204 ரன்கள்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 152 பந்துகளை வீசி 204 ரன்களை விட்டு கொடுத்திருக்கிறார். ஆனால் சமீப காலமாக விராட் கோல பந்துவீசுவதையே நிறுத்திவிட்டார். இந்த நிலையில், ஹாங்காங்க்கு எதிரான போட்டியில் விராட் கோலி திடீரென்று ஒரு ஓவர் வீசி 6 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து இருக்கிறார்.

காரணம் என்ன?
இந்த முடிவுக்கு பின்னரே ரோகித் சர்மா தான் இருக்கிறார் என்று தற்போது தெரியவந்துள்ளது. விராட் கோலியிடமிருந்து ஒரு ஓவர் அல்லது 2 ஓவரை அதிகபட்சமாக அணி எதிர்பார்ப்பதாகவும், ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளத்தில் விராட் கோலி பந்தின் வேகத்தை குறைத்து வீசும் போது பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட் ஆடி விக்கெட்டுகளை இழக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் டிராவிட், ரோகித் கூட்டணி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

கூடுதல் பொறுப்பு
பேட்ஸ்மேனாக இருக்கும் கோலிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கும் போது, அது அவருக்கு கூடுதல் உத்வேகத்தை தரும். மேலும், பந்துவீச்சாளராக கோலி ஜோலித்தால், அது பேட்ஸ்மேனாக கோலிக்கு கூடுதல் நம்பிக்கையை தரும். ஆனால் கோலியின் ஓவரில் அதிக ரன்கள் போகவும் வாய்ப்புண்டு. இதனால், அவரை சரியாக பயன்படுத்தும் பொறுப்பு ரோகித்துக்கு தான் உண்டு. யுவராஜை தோனி பயன்படுத்தி, வெற்றி கண்டது போல் ரோகித் வெற்றி காண்பாரா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications