Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“வச்சான் பாரு ஆப்பு” 3வது ODI.. ரோகித் சர்மா ரிஸ்க் எடுத்தால் சிக்கல் உறுதி.. எமனாக நிற்கும் பிட்ச்

திருவனந்தபுரம்: இலங்கை அணியுடனான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா ரிஸ்க் எடுக்கிறேன் என டாஸில் தவறு செய்தால், மோசமான தோல்வியை சந்திக்க நேரிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 2 - 0 என இந்தியா தொடரை கைப்பற்றிய சூழலில் கடைசி போட்டி நாளை திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இலங்கை அணியை வைட் வாஷ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய அணியும், ஒரு முறையாவது பதிலடி கொடுத்துவிட வேண்டுமென இலங்கை அணியும் முனைப்புடன் களமிறங்குகிறது.

சவால் கொடுக்கும் போட்டி

சவால் கொடுக்கும் போட்டி

இத்தகைய கவுரவப்போட்டி நடைபெறும் பிட்ச்-ல் தான் ட்விஸ்ட் வைத்துள்ளனர். போட்டி நடைபெறும் கிரீன் ஃபீல்ட் மைதானத்தில் கடந்த 2 போட்டிகளில் சிக்ஸர் மழை பொழிந்தது போல அடித்துவிட முடியாது. 250 ரன்கள் அடிப்பதற்கு கூட பேட்ஸ்மேன்களுக்கு பெரும் போராட்டமாக இருக்கும். ஏனென்றால் இங்கு பிட்ச்-ன் தன்மை நேரம் போக போக மெதுவாக மாறிக்கொண்டே செல்லும்.

பிட்ச்- நிலைமை

பிட்ச்- நிலைமை

ஆட்டத்தின் தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்விங் ஆகும். அதன்பின்னர் பிட்ச் ஸ்லோவாகி சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அடிபணிந்துவிடும். குறிப்பாக ஸ்பின்னர்கள் ஸ்லோயர் பந்துகளாக வீசினால் அட்டகாசமான டேர்ன்களை எதிர்பார்க்கலாம். இந்த மைதானம் பெரிய பவுண்டரிகளை கொண்டதும் இல்லை. பேட்ஸ்மேன்கள் நிதானமாக நின்று, நேரம் எடுத்து ஆடினால் நிச்சயம் சாதிக்கலாம்.

டாஸில் என்ன செய்வது?

டாஸில் என்ன செய்வது?

இங்கு 2வது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவு இருக்கும் என்பதால் ஸ்பின்னர்களால் நினைத்த இடத்தில் வீசவுது கடினம். எனவே டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது தான் நல்ல முடிவாகும். எனினும் ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டதால், ரோகித் சர்மா பனிப்பொழிவில் பந்துவீசும் அனுபவத்தை தருவதற்கு ரோகித் சர்மா ரிஸ்க்கான முடிவை டாஸில் எடுக்கலாம். அப்படி எடுத்தால் தோல்விக்கு தான் வாய்ப்பு அதிகம். இந்த மைதானத்தில் 4 சர்வதேச போட்டிகள் இதுவரை நடந்திருந்தாலும், ஒரே ஒரு 50 ஓவர் போட்டி தான் நடந்துள்ளது. அதிலும் வெஸ்ட் இண்டீஸை 104 ரன்களுக்கு இந்தியா சுருட்டிவிட்டது.

2 வீரர்கள் சேர்ப்பு

2 வீரர்கள் சேர்ப்பு

இந்த முறை அணியின் ப்ளேயிங் 11ல் அதிரடி வீரர்களான இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சேர்க்கப்படுவதாக தெரிகிறது. இவர்கள் இருவருமே பிட்ச்-ஐ பற்றி எவ்வித கவலையும் படாமல், அசால்ட்டாக பேட்டை சுழற்றக்கூடியவர்கள். எனவே இந்தியாவின் இந்த யுக்தி சரிவருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, January 14, 2023, 14:06 [IST]
Other articles published on Jan 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+