Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓப்பனிங் இடத்திற்கே சிக்கல்.. இஷான் vs சுப்மன் கில்.. முதல் ODI.. விழிப்பிதுங்கும் ரோகித் - காரணம்

கவுகாத்தி: இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் ஓப்பனிங் இடங்களுக்கே கடும் தலைவலியுடன் இருந்து வருகிறார் கேப்டன் ரோகித் சர்மா.

இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரை இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ளன.

முதல் ஒருநாள் போட்டி நாளை கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்த தொடருக்கான இந்திய அணியில் அனைத்து முன்னணி வீரர்களும் கம்பேக் கொடுத்துவிட்டனர் எனக்கூறலாம். காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் வந்துள்ளார். இதே போல முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களான முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இருவரும் முழு உடற்தகுதியுடன் அணிக்குள் வந்துள்ளனர். இதனால் முழு பலம் பெற்றுள்ளது.

திடீர் குழப்பம்

திடீர் குழப்பம்

இந்நிலையில் இந்தியாவின் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் தொடக்கத்திலேயே ரோகித் சர்மா குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். ஓப்பனிங் வீரராக கேப்டன் ரோகித் சர்மா களமிறங்குவார். ஆனால் அவருடன் ஜோடி சேருவதற்கு இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் போட்டியிட்டு வருகின்றனர்.

சுப்மன் கில் ஃபார்ம்

சுப்மன் கில் ஃபார்ம்

இந்தியாவின் முதன்மை ஓப்பனராக தற்போது ஜொலித்து வரும் சுப்மன் கில் கடந்த 12 போட்டிகளில் 638 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், 4 அரைசதங்களும் அடங்கும். 102.57 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 70.88 என்ற சராசரியுடன் விளையாடி வருகிறார். ஷிகர் தவானை போன்று தூண் போல நிலைத்து நின்று சீரான வேகத்தில் ரன் உயர்த்தக்கூடியவர் ஆகும்.

இஷானின் அதிரடி

இஷானின் அதிரடி

மற்றொருபுறம் இஷான் கிஷான் அதிரடி ஃபார்முடன் இருக்கிறார். கடந்த 7 இன்னிங்ஸ்களில் அவர் 417 ரன்களை குவித்துள்ளார். அவரின் சராசரி 59.57 ரன்களை வைத்துள்ளார். குறிப்பாக வங்கதேச அணியுடன் இரட்டை சதத்தை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். எனவே அதிரடி வீரருக்கு பரிந்துரை செய்தால் இஷான் கிஷான் முதன்மை வீரராக இருக்கிறார். இவர்கள் இருவரில் யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற குழப்பம் எழுந்துள்ளது.

Story first published: Monday, January 9, 2023, 12:40 [IST]
Other articles published on Jan 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+