Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மாவுக்கு கிடைத்த “2 லட்டு”.. ஒண்ணு டி20 அணிக்கு கேப்டன் ஆனது.. இரண்டாவது?

மும்பை : ரோஹித் சர்மா தற்போது தன் கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருக்கிறார்.

கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் கேப்டனாக சென்று ஏழாவது ஆசிய கோப்பையை வென்று கொடுத்தார்.

அடுத்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் பதவியை பெற்றுள்ளார். அடுத்து நீண்ட நாட்கள் தள்ளிப் போன டெஸ்ட் அணி வாய்ப்பும் அவருக்கு மீண்டும் கிடைத்துள்ளது.

டி20 தொடரில் கோலிக்கு ஓய்வு

டி20 தொடரில் கோலிக்கு ஓய்வு

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியா டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி அக்டோபர் 26 அன்று அறிவிக்கப்பட்டது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள டி20 தொடருக்கு கோலி கேப்டன் பதவி வகிப்பார் என கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது டி20 தொடர்

மூன்றாவது டி20 தொடர்

இது ரோஹித் சர்மாவுக்கு கிடைக்கும் மூன்றாவது டி20 தொடருக்கான கேப்டன் வாய்ப்பு. முதல் இரண்டு முறையும் கேப்டனாக தொடரை வென்று கொடுத்த ரோஹித், மூன்றாவது டி20 தொடரையும் வெல்வார் என எதிர்பார்க்கலாம். அதே சமயம், வெஸ்ட் இண்டீஸ் அணி டி20யில் சவாலான அணி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அழுத்தம் காரணம்

அழுத்தம் காரணம்

ரோஹித் சர்மா கடந்த 2016க்கு பின் நான்கு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார். கடைசியாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்டில் ஆடி இருந்தார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து கலக்கி வரும் ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியில் ஏன் சேர்க்கவில்லை என்ற அழுத்தத்தின் காரணமாக அவரை தற்போது அணியில் இணைத்துள்ளனர். எனினும், அவரை துவக்க வீரராக களமிறக்க மாட்டார்கள் என தெரிகிறது.

இந்திய டி20 அணி - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்

இந்திய டி20 அணி - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, கலீல் அஹ்மது, உமேஷ் யாதவ், ஷாபாஸ் நதீம்

Story first published: Saturday, October 27, 2018, 13:18 [IST]
Other articles published on Oct 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+