“நாங்க எதிர்பார்த்ததை விட முன்னேறிட்டாங்க”.. நியூசிலாந்துடனான வெற்றி.. ரோகித் சர்மா புகழாரம்!
ராய்பூர்: நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றதில் இந்திய அணியின் பவுலர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி ராய்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஓவரிலேயே பிட்ச் ட்விஸ்ட் தந்தது. எதிர்பார்த்ததை விட அதிகப்படியான வேகமும் ஸ்விங்கும் களத்தில் இருந்ததால் பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியவில்லை.

எளிய இலக்கு
அந்த அணியில் ஓப்பனிங் வீரர்கள் ஃபின் ஆலன் (0), டெவோன் கான்வே (7) என சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இதன் பின்னர் வந்த ஹென்றி நிகோலஸ் (2), டேரில் மிட்செல் (1), டாம் லேதம் (1) என அடுத்தடுத்து வெளியேறினர். லோயர் ஆர்டரில் வந்த க்ளென் பிலிப்ஸ் (36) மற்றும் மிட்செல் சாண்ட்னர் (27) மட்டும் ஓரளவிற்கு போராட 34.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அபார வெற்றி
மிகவும் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங் வீரர்களே ஓரளவிற்கு ஆட்டத்தை முடித்துவிட்டனர். கேப்டன் ரோகித் சர்மா (51) சுப்மன் கில் ( 40) என அடிக்க 20.1 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு இந்திய அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 எனவும் கைப்பற்றியது.

ரோகித்தின் விளக்கம்
இந்த போட்டி குறித்து பேசியுள்ள ரோகித், பவுலர்களை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதில், கடந்த 5 போட்டிகளாக எங்களின் பவுலர்கள் ஒருபடி முன்னேறியுள்ளனர். அணிக்கு என்ன கேட்கிறோமோ அதை சரியாக செய்து முடிக்கின்றனர். அவர்களின் கடின உழைப்புக்கு பலன்கள் கிடைத்துவிட்டது என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

எதிர்பார்க்காத வேகம்
இதுபோன்ற வேகமான களத்தை அயல்நாடுகளில் தான் பார்க்க முடியும். ஆனால் இன்று இந்தியாவில் இருந்தது. அவர்கள் 250 ரன்களை அடித்திருந்தால் கூட எங்களுக்கு மிகவும் கடினமாக சென்றிருக்கும். முதல் போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்தோம். எனவே இந்த போட்டியில் சற்று சவாலாக எடுத்துக்கொள்வோம் என பவுலிங்கை தேர்வு செய்தேன். அணியில் நம்பிக்கை முன்பை விட பல மடங்கு அதிகரித்துவிட்டது என ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications