Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அரிதிலும் அரிய திறமை அவருகிட்ட இருக்கு”.. ஆச்சரியப்பட வைத்த இளம் வீரர்.. ரோகித் சர்மா புகழாரம்!

மும்பை: இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட்தொடரை வென்ற சூழலில் இந்திய அணியில் அரிதிலும் அரிதான திறமையை கொண்ட வீரர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரோகித் சர்மா புகழ்ந்துள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இந்திய அணி 3 - 0 என்ற புள்ளிக்கணக்கில் ஒயிட் வாஷ் செய்து அசத்தியுள்ளது.

குறிப்பாக கடைசி போட்டியில் 390 ரன்களை குவித்த இந்தியா, 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது உலகளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ரோகித் சர்மாவுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

 ரோகித் சர்மா புகழாரம்

ரோகித் சர்மா புகழாரம்

இந்நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவோ, இளம் வீரர் ஒருவரை புகழ்ந்து தள்ளியுள்ளார். வெற்றி குறித்த பேசிய அவர், இந்த தொடர் எங்களுக்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. பல நல்ல விஷயங்களை இதில் இருந்து கற்றுக்கொண்டுள்ளோம். ஒவ்வொரு போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் அபாரமாக செயல்பட்டனர் என்பது உண்மை தான். ஆனால் இந்த தொடரில் பவுலிங் ஒருபடி மேல் சென்றுவிட்டதாக நினைக்கிறேன்.

அரிய டேலண்ட்

அரிய டேலண்ட்

குறிப்பாக இளம் பவுலர் முகமது சிராஜ் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். சிராஜிடம் அரிதிலும் அரிய திறமைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே அவருடைய வளர்ச்சி ஆச்சரியத்தை தருகிறாது. 3வது போட்டியில் அவரால் 5 விக்கெட்கள் எடுக்க முடியவில்லை. எனினும் அவரின் 4 விக்கெட்கள் 5 விக்கெட்களை எடுத்ததற்கு சமமாக நான் பார்க்கிறேன். அவர் அணியில் இருப்பது எங்களும் அதிக பலத்தை தருகிறது. இந்த தொடரில் நமக்கு கிடைத்த ஹீரோ அவர்தான் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

அப்படி என்ன செய்தார்?

அப்படி என்ன செய்தார்?

இலங்கையுடனான 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா இல்லாத குறையே தெரியாத வண்ணம் செயல்பட்டார். மொத்தமாக 3 போட்டிகளையும் சேர்த்து 9 விக்கெட்களை கைப்பற்றினார். அவரின் எகானமி ரேட்டும் 6க்கு கீழாக தான் இருந்தது. இதனால் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் சிராஜுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத்தெரிகிறது.

அடுத்த தொடர்கள்

அடுத்த தொடர்கள்

இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் மோதுகிறது. இது இந்தியாவில் தான் நடக்கிறது. ஜனவரி 18ம் தேதி முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதன் பின்னர் ஜனவரி 27ம் தேதி முதல் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 16, 2023, 17:59 [IST]
Other articles published on Jan 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+