அதை மட்டும் செய்யலனா.... நிச்சயமா தோத்திருப்போம்... வெற்றி ரகசியத்தை வெளியே சொன்ன ரோகித்
ஹைதராபாத்: சரியான தருணத்தில் சிறப்பாக பந்து வீசியதால் அணிக்கு சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற முடிந்தது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி துவக்கத்தில் இருந்தே விக்கெட்டினை இழந்துவந்தது. மும்பை அணியின் பொல்லார்டு மட்டும் ஓரளவு சிறப்பாக விளையாடி 26 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். முடிவில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 136 ரன்களை மட்டுமே எடுத்தது.

6 விக். வீழ்த்தினார்
அதை தொடர்ந்து விளையாடிய சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் சீட்டுக்கட்டுபோல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒருவர்கூட 20 ரன்களை தாண்ட வில்லை. மும்பையில் அறிமுக வீரர் அல்சாரி ஜோசப் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரோகித் சர்மா பேட்டி
அதனால் சன் ரைசர்ஸ் அணி 17.4 ஓவர்களில் 96 ரன்களுக்கு சுருண்டது. மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. போட்டி முடிந்த பிறகு வெற்றிக்குறித்து பேசிய ரோகித் கூறியதாவது : இந்த போட்டியில் வெற்றி சிறப்பான தருணம்.

பொல்லார்டு ஆட்டம்
இந்த மைதானத்தில் 160 முதல் 170 ரன்கள் வரை அடித்திருக்க வேண்டும். ஆனால், நாங்கள் அவ்வளவு ரன்கள் அடிக்கவில்லை. பொல்லார்டு கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி முக்கியமாக பங்காற்றினார்.

அல்சாரிக்கு பாராட்டு
பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். அதனால் எதிர் அணிக்கு அழுத்தத்தை தரமுடிந்தது. அல்சாரி ஜோசப் சிறப்பாக பந்துவீசினார் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications