
மீண்டும் வாய்ப்பு
வாழ்க்கை ஒரு வட்டம் டா.. மேலே இருக்கிறவன் கீழே வருவான், கீழே இருக்குறவன் மேல போவான் என்று நடிகர் விஜய் திருமலை படத்தில் ஒரு வசனம் சொல்வாரே, அதே போல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு வாரம் ரோகித் சர்மா முதலிடம் இருப்பார். அடுத்த வாரம் நியூசிலாந்த வீரர் குப்தில் முதலிடத்தில் இருப்பார். அப்படி தான் இருவரும் மாறி மாறி ரோலர் கோஸ்டர் ரைடு போல் இந்த பயணம் உள்ளன.

ரோகித் வைத்த குறி
தற்போது குப்தில் 3497 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரோதித் சர்மா 2வது இடத்தில் 3487 ரன்களுடன் உள்ளார். இதனால், ஒரு 10 ரன்கள் அடித்தால் ரோகித் சர்மா மீண்டும் முதலிடம் பிடித்துவிடுவார். ஆனால் இம்முறை குப்தில் தொடவே முடியாத படி உயரத்தை அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிய கோப்பை போட்டியில் குறைந்தபட்சம் 5 போட்டியில் ரோகித் விளையாடுவார்.

சிக்சர் சாதனை
இதில் ரோகித் சர்மா ஒரு 200 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டால், பின்னர் குப்தில் அவரை தொட வாய்ப்பு இருக்காது. இதே போன்று மற்றொரு சாதனை படைக்கவும் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசியவர்கள் பட்டியலில் குப்தில் 172 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

முதலிடத்திற்கு வாய்ப்பு
இந்த பட்டியலில் ரோகித் சர்மா 163 சிக்சர்களுடன் 2வது இடத்தில் உள்ளார். இதனால் ஆசிய கோப்பை தொடரில் ரோகித் சர்மா, ஒரு பத்து சிக்சர் அடித்துவிட்டால், அதிலும் அவர் நம்பர் 1 இடத்தை பிடித்து அதிக சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள், அதிக சிக்சர், கேப்டனாக சதம் அடித்த வீரர் போன்ற சாதனைகளை ரோகித் சர்மா வகித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications