For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாளையில் இருந்து கண்டம் ஆரம்பம்.. இதுதான் கடைசி வாய்ப்பு.. ரன் எடுக்கலைனா? மூத்த வீரரின் கதி!

Recommended Video

Ind vs SA | Rohit Sharma | டெஸ்ட் அணியில் ரோஹித் ஷர்மாவுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு!-வீடியோ

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா நாளை நடைபெறும் பயிற்சிப் போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

டெஸ்ட் தொடருக்கு முன் போர்டு ப்ரெசிடென்ட் லெவன் (இந்தியா) - தென்னாப்பிரிக்கா அணிள் மோதும் மூன்று நாள் பயிற்சிப் போட்டி நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான அணியில் இடம் பெற்று இருக்கும் ரோஹித் சர்மா, துவக்க வீரராக களமிறங்க உள்ளார்.

மிடில் ஆர்டர் வீரர்

மிடில் ஆர்டர் வீரர்

ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் இதுவரை மிடில் ஆர்டர் வீரராக இருந்தார். ஒருநாள் மற்றும் டி20 அணியில் துவக்க வீரராக இருந்தாலும். இது வரை டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டரில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

சரியான வாய்ப்பு இல்லை

சரியான வாய்ப்பு இல்லை

அதிலும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவால் ரன் குவிக்க முடியவில்லை எனக் கூறி அவருக்கு வாய்ப்பு மறுக்கபடுவதும், பின் அணியில் சேர்க்கப்படுவதுமாக ஊசலாடிக் கொண்டு இருந்தார்.

ராகுல் சொதப்பல்

ராகுல் சொதப்பல்

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோஹித் சர்மா உத்தேச அணியில் இடம் பெற்றும், போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்காமல் வெளியே அமர்ந்தார். அதே சமயம், துவக்க வீரர் ராகுல் அந்த தொடரில் மோசமான செயல்பாட்டால் தன் வாய்ப்பை இழந்தார்.

துவக்க வாய்ப்பு

துவக்க வாய்ப்பு

அதனால், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா துவக்க வீரராக ஆட வாய்ப்பு பெற்றார். நீண்ட போராட்டத்துக்குப் பின் கிடைத்த இந்த வாய்ப்பில் ரோஹித் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

நிரூபிக்க வேண்டும்

நிரூபிக்க வேண்டும்

இந்த நிலையில் தான் பயிற்சிப் போட்டியில் பங்கேற்க உள்ளார் ரோஹித் சர்மா. மூன்று போட்டிகள் கொண்ட தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன் நடக்க உள்ள இந்த பயிற்சிப் போட்டியில் ரோஹித் ரன் குவித்தால் மூன்று போட்டிகளிலும் அவரே துவக்க வீரராக இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

கடைசி கட்ட வாய்ப்பு

கடைசி கட்ட வாய்ப்பு

மேலும், தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் தான் ரோஹித் சர்மாவிற்கு கடைசி டெஸ்ட் வாய்ப்பு என்றும் கூறலாம். இதில் அவர் ரன் குவிக்காவிட்டால், அடுத்து வரிசையில் இருக்கும் பல இளம் வீரர்களிடம் தன் இடத்தை பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

Story first published: Wednesday, September 25, 2019, 14:53 [IST]
Other articles published on Sep 25, 2019
English summary
Rohit Sharma has to prove himself in the practice match before the SA series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+