Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாய்ப்புக்காக அடித்துக்கொள்ளும் 2 வீரர்கள்.. 2வது டெஸ்ட்டில் நிலவும் குழப்பம்.. ரோகித்திற்கு தலைவலி!

பெங்களூரு: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

Recommended Video

Rohit Sharma needs to think about his pull shot -Sunil Gavaskar | Oneindia Tamil

இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒரு வெற்றியுடன் முன்னிலை வகிக்கிறது.

2வது போட்டியையும் கைப்பற்றி வைட் வாஷ் செய்ய வேண்டும் என இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகலிரவு டெஸ்ட்

பகலிரவு டெஸ்ட்

இந்த போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பகலிரவு டெஸ்டாக நடைபெறவிருக்கிறது. இதற்காக வழக்கமான ரெட் நிற பந்து பயன்படுத்தாமல், பிங்க் நிற பந்தை பயன்படுத்தவுள்ளனர். அதற்கேற்றவாறு ப்ளேயிங் 11- ஐ தேர்வு செய்யும் பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது. அணியில் 3வது ஸ்பின்னராக அக்‌ஷர் சேர்க்கப்படுவாரா? அல்லது 3வது வேகப்பந்துவீச்சாளராக முகமது சிராஜ் சேர்க்கப்படுவாரா? என்பதில் தான் சண்டை நிலவுகிறது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

பெங்களூருவில் நடைபெறும் முதல் பிங் பால் டெஸ்ட் இதுவாகும். இங்கு வழக்கமாக முதல் 3 நாட்களுக்கு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும், அடுத்த 2 நாட்கள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாகவும் இருக்கும். ஆனால் பிங்க் எஸ் ஜி பந்து சற்று தாக்கத்தை அதிகமாக ஏற்படுத்தும் என்பதால் வேகப்பந்துவீச்சுக்கும் சாதகம் உள்ளது.

நீடிக்கும் குழப்பம்

நீடிக்கும் குழப்பம்

அதாவது முதல் 2 நாட்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவலாம். மேலும் பெங்களூருவில் மாலை நேரத்தில் குளிர்தன்மை இருக்கும். இதனால் ஸ்விங் நன்றாக ஆகும். கடைசி 2 நாட்களுக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

ஏன் இந்த மோதல்

ஏன் இந்த மோதல்

பெங்களூருவில் செம்மண் பிட்ச்- ஆகும். அகமதாபாத்திலும் இதே மண் தான் என்பதால் அக்‌ஷருக்கு அனுபவம் உள்ளது. இதே போல பெங்களூரு மைதானத்தை நன்கு அறிந்தவர் முகமது சிராஜ். ஆர்சிபி அணிக்காக இங்கு நிறைய போட்டிகளை விளையாடி, நுணுக்கங்களை அறிந்தவர். இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் ரோகித் சர்மாவே குழப்பத்தில் உள்ளார்.

Story first published: Friday, March 11, 2022, 15:07 [IST]
Other articles published on Mar 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+