Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தீவிர நெட் பயிற்சியில் ஹிட்மேன்... ஹிட்டடிக்க காத்திருக்கும் துவக்க வீரர்!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நாளை துவங்கவுள்ளது.

இதையொட்டி தங்களது குவாரன்டைனை முடித்துள்ள இந்திய, இங்கிலாந்து வீரர்கள், நெட் பயிற்சிகளில் ஈடுப்ட்டுள்ளனர்.

இதனிடையே ஹிட்மேன் ரோகித் சர்மாவும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

முதல் டெஸ்ட் நாளை துவக்கம்

முதல் டெஸ்ட் நாளை துவக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னையிலும் அடுத்த இரு போட்டிகள் அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளன. இதையொட்டி 6 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட்ட இந்திய மற்றும் இங்கிலாந்து அணியினர் தற்போது நெட் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கிலாந்தை வெற்றி கொள்ள தீவிரம்

இங்கிலாந்தை வெற்றி கொள்ள தீவிரம்

கடந்த சில தினங்களாக இந்திய அணியினர் சென்னை சிதம்பரம் மைதானத்தில் வலை பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதை காண முடிகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி தகுதி பெற இந்த தொடரில் இங்கிலாந்தை 2க்கு 0 என்ற கணக்கில் முந்த வேண்டும்.

தீவிர வலைப்பயிற்சி

தீவிர வலைப்பயிற்சி

இதையடுத்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் தீவிர வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சி குறித்து விராட் கோலி மற்றும் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் அணி வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியதையும் பார்க்க முடிந்தது.

தீவிர வலைப்பயிற்சி

இந்நிலையில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மாவும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. கடந்த காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் இறுதி 2 போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற ரோகித் சர்மா தற்போது இந்த தொடரில் இடம்பெற்றுள்ளார்.

Story first published: Thursday, February 4, 2021, 13:17 [IST]
Other articles published on Feb 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+