Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் கிரிக்கெட் மனைவி நீங்கள்... டிராவிட்டுக்கு ரோகித் சர்மா எழுதிய உருக்கமான கடிதம்

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றதை எடுத்து பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராகுல் டிராவிட் விலகி இருக்கிறார். தன்னுடைய பதவி காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் விண்ணப்பிக்க போவதில்லை என ராகுல் டிராவிட் முடிவெடுத்திருக்கிறார்.

ராகுல் டிராவிட், ரோகித் சர்மா கூட்டணி இந்திய அணிக்காக பல்வேறு வெற்றிகளையும் சாதனைகளையும் செய்து இருக்கிறது. இந்த நிலையில் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ள நிலையில் ராகுல் டிராவிட்டுக்கு கேப்டன் ரோகித் சர்மா ஒரு உருக்கமான கடிதத்தை எழுதி இருக்கிறார்.

rahul dravid indian cricket team rohit sharma

அதில் என் இனிய ராகுல் சகோதரருக்கு, என்னுடைய உணர்ச்சிகளை சரியான வார்த்தையை பயன்படுத்தி வெளி கொண்டு வர முயற்சி செய்கின்றேன். ஆனால் அது முடியுமா என்று தெரியவில்லை. ஏதோ இந்த பதிவில் அதை நான் முயற்சி செய்து இருக்கிறேன். என் சிறு வயதில் இருந்து, பல கோடி மக்களைப் போல் நானும் உங்களை பார்த்து தான் வளர்ந்தேன்.

அது மட்டுமல்லாமல் உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றேன். இந்த கிரிக்கெட் விளையாட்டில் நீங்கள் ஒரு சிறந்த நட்சத்திரமாக விளங்கினீர்கள். நீங்கள் பேட்ஸ்மேனாக என்ன சாதனைகள் படைத்தீர்களோ, அதை எல்லாம் வாசல் கதவிலேயே விட்டுவிட்டு சாதாரண ஒரு பயிற்சியாளராக எங்களுடன் வந்து கைகோர்த்தீர்கள். நீங்கள் எங்களுடைய தரத்திற்கு வந்து எங்களை பார்த்து கொண்டீர்கள்.

உங்கள் குணத்தை பற்றி சொல்ல இதுவே போதும் என்று நினைக்கின்றேன். இந்த டி20 உலக கோப்பை என்பது உங்களுக்கான பரிசு. இந்த கிரிக்கெட் மீது நீங்கள் எவ்வளவு காதல் வைத்திருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். உங்களிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றேன். உங்களிடம் பணியாற்றிய அந்த நிகழ்வுகளை நான் என்றும் மறக்க மாட்டேன்.

உங்களை எனது கிரிக்கெட் மனைவி என்று தான் என்னுடைய மனைவி அழைப்பார். அப்படி அழைக்கப்படுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்ததாக நினைக்கின்றேன். உலகக்கோப்பை என்ற ஒரு விஷயம் மட்டும் தான் உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இல்லாமல் இருந்தது.
தற்போது அதுவும் நமது கூட்டு முயற்சி மூலம் கிடைத்து விட்டது. உங்களை என் நம்பிக்கை கூறியவர், என்னுடைய பயிற்சியாளர், என்னுடைய நண்பர் என்று கூற நான் மிகவும் பெருமை கொள்கின்றேன் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Story first published: Tuesday, July 9, 2024, 18:16 [IST]
Other articles published on Jul 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+