புனே: ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டு விட்டதாக ரசிகர்கள் வருத்தமடைந்துள்ள நிலையில் அவரோ ஜாலியாக செய்துள்ள ஒரு விஷயம் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியை வென்றுள்ள இந்திய அணி 2வது ஒருநாள் போட்டிக்காக தயாராகி வருகிறது

இந்நிலையில் ஓய்வு நேரத்தின் போது இந்திய அணி வீரர்கள் விளையாட்டு தனமாக சில விஷயங்களை செய்து வருகின்றனர். அந்தவகையில் போது ரோகித் சர்மா செய்துள்ளது பேசுப்பொருளாகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனால் 2வது ஒருநாள் போட்டிக்காக தயாராகி வருகிறது. முதல் போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் 2வது போட்டியில் பங்கேற்பது சந்தேகம் தான் என தகவல் வெளியானதால் ரசிகர்கள் குழம்பியிருந்தனர்.
இந்நிலையில் ரோகித் சர்மா அப்படி ஒரு காயமே ஏற்பட்டது தெரியாதது போன்று ஒரு செயலை செய்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயோ பபுளில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்யப்படும். அந்த வகையில் இன்றும் இந்திய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்படி ரோகித் சர்மாவுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததை கிண்டல் செய்வதற்காக ரிஷப் பண்ட் அதனை வீடியோ எடுத்தார். அதை கவனித்த ரோகித் சர்மா, ரிஷப் பண்ட்-க்கு தனது நடு விரலை காட்டி அசிங்கப்படுத்தினார். இதனால் அருகில் இருந்தவர்கள் சிரித்தனர். இந்த வீடியோவை பண்ட் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரோகித்திற்கும்,காயம் ஏற்பட்டதாக கூறிய நிலையில் ரோகித் சர்மா நலமுடன் இருப்பது இந்த வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது. ஆனால் ஸ்ரேயாஸ் நிலைமை குறித்து தகவல் வெளியாகவில்லை.