Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் சாதனையை ஊதித் தள்ளிய “ஹிட்மேன்” ரோஹித்.. கங்குலியையும் முந்தினார்

Recommended Video

ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா- வீடியோ

கவுஹாத்தி : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 21 அன்று நடைபெற்றது.

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 322 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி, எந்த தடுமாற்றமும் இன்றி அந்த ரன்களை எளிதாக சேஸ் செய்தது.

கோலி, ரோஹித் சதம் அடித்து கூட்டணியாக 246 ரன்கள் குவித்தனர். இதையடுத்து இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா சச்சின் மற்றும் கங்குலியின் சாதனைகளை முந்தினார்.

6 முறை 150+ ரன்கள்

6 முறை 150+ ரன்கள்

ரோஹித் சர்மா 117 பந்துகளில் 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 சிக்ஸர்களும் அடங்கும். ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இது வரை ஆறு முறை 150 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார்.

சச்சின் சாதனை முறியடிப்பு

சச்சின் சாதனை முறியடிப்பு

சச்சின் டெண்டுல்கர் மற்றும் டேவிட் வார்னர் ஒருநாள் போட்டிகளில் 5 முறை 150 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளனர். சனத் ஜெயசூர்யா, ஹஷிம் அம்லா, கிறிஸ் கெயில் ஆகியோர் நான்கு முறை 150 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளனர்.

உலக சாதனை செய்த ரோஹித்

உலக சாதனை செய்த ரோஹித்

ரோஹித் சர்மா 152 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்தவர் என்ற பெருமை பெற்றுள்ளார். அது மட்டுமின்றி ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை 200 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளார்.

கங்குலியின் சாதனை முறியடிப்பு

கங்குலியின் சாதனை முறியடிப்பு

ரோஹித் இந்த போட்டியில் எட்டு சிக்ஸர்கள் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் கங்குலியின் அதிக சிக்ஸர் அடித்த சாதனையை முறியடித்தார். தற்போது ரோஹித் 194 சிக்ஸர்கள் அடித்துள்ளார். கங்குலி 190 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ரோஹித் மேலும் 2 சிக்ஸர்கள் அடித்தால் சச்சினின் அதிக சிக்ஸர் சாதனையையும் முறியடித்து விடுவார்.

Story first published: Monday, October 22, 2018, 12:51 [IST]
Other articles published on Oct 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+