Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா முதல் சதம்.. மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்.. முன்னிலை பெற்ற இந்தியா

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசினார். இதில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவுக்கு 9வது சதமாகும்.

ஆடுகளம் பெரிய அளவில் பேட்டிங்கிற்கு ஆபத்து தரவில்லை என்றாலும், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளும் யுத்தி, திறன் தற்போதைய தலைமுறை பேட்ஸ்மேன்களிடம் குறைந்து வருவதையே இந்த போட்டி காட்டுகிறது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அடுத்ததாக பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார்.

ரோகித் அதிரடி

ரோகித் அதிரடி

ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் அடித்து 12 ரன்கள் அடித்தார். ஆனால் மறுபுறம் கேஎல் ராகுல் மோசமாக விளையாடி ரன்களை சேர்க்க தடுமாறினார். இது அவர் பார்மில் இல்லலாததையே காட்டியது. இதனையடுத்து அவர் 20 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் அதிரடி காட்டிய ரோகித் சர்மா 66 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

மற்றவர்கள் தடுமாற்றம்

மற்றவர்கள் தடுமாற்றம்

இதே போன்று 2வது நாளை இந்திய அணி 77 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற ஸ்கோருடன் தொடங்கியது. அஸ்வின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். ஒரு புறம் ரோகித் சர்மா பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடுவதை போல் அதிரடி காட்ட, மற்ற பேட்ஸ்மேன்கள் வேறு ஆடுகளத்தில் விளையாடுவது போல் தடுமாறினர்.

தனி ஆளாக போராட்டம்

தனி ஆளாக போராட்டம்

அப்போது புஜாரா 7 ரன்களில் எடுத்த போது தேவையில்லாமல் ஸ்விப் ஷாட் ஆடி ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, பந்து இடதுபுறம் செல்வதை தொட்டு, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். தனது அறிமுக போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி தடுமாறிய போது, ரோகித் சர்மா மட்டும் தனி ஆளாக போராடினார்.

ரோகித் சதம்

ரோகித் சதம்

குறிப்பாக பாட் கம்மின்ஸ் ஓவரில் தன்னுடை புல் ஷாட்டை ஆடி சிக்சருக்கு விரட்டினார். இதன் மூலம் ரோகித் சர்மா 171 பந்தில் சதத்தை விளாசினார். இது டெஸ்ட் கேப்டனாக ரோகித் அடிக்கும் முதல் சதமாகும். இதே போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் ரோகித் சர்மா சதம் அடித்தார், இதன் முலம் ஆதிரேலியாவின் முதல் இன்னிங்சை விட இந்திய அணி முன்னிலை பெற்றது. இன்னும் இந்தியா கூடுதலாக 100 ரன்கள் முன்னிலை பெற்றால், அது பெரும் சாதகமாக அமையும்.

Story first published: Friday, February 10, 2023, 14:24 [IST]
Other articles published on Feb 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+