Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா டா! 34வது சதம் விளாசி இங்கிலாந்தை பொளந்தார்.. விமர்சனங்களுக்கு ஹிட்மேன் பதிலடி

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா தனது 34 ஆவது ஒரு நாள் சதத்தை விளாசி அசத்தியிருக்கிறார். ரோகித் சர்மா கடந்த சில போட்டிகளாக தடுமாறினார்.

இதன் காரணமாக அவரை இந்திய அணியை விட்டு அனுப்பலாம் என்றும் அவரை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வைக்க அணி நிர்வாகம் முடிவெடுத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை அவரது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று வதந்திகள் கிளம்பின.

Rohit sharma

இந்த சூழலில் தொடரை தீர்மானிக்கக் கூடிய கடைசி ஒரு நாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 388 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதன் அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான கில், ரோகித் சர்மா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர்.

ரோகித் சர்மா ஓய்வு பெறுகிறாரா? மவுனத்தை கலைத்த பிசிசிஐ.. ஒரே போன் காலில் மாறிய காட்சி

ரோகித் சர்மா ஓய்வு பெறுகிறாரா? மவுனத்தை கலைத்த பிசிசிஐ.. ஒரே போன் காலில் மாறிய காட்சி

இங்கிலாந்து வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர். எனினும் மிகப்பெரிய இலக்கு என்பதால் தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளம் அமைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் ரோகித் சர்மா, கில் ஆகியோர் விளையாடினர். ஒரு கட்டத்தில் ரோகித் சர்மா தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார்.

அடிக்க வேண்டிய பந்துகளை பவுண்டரி சிக்ஸர் என அடித்தார். மேலும் தனது அடையாளமாக புல் ஷாட்டுகளை அடித்து சிக்ஸர்களை விளாசினார். ஒரு கட்டத்தில் ரோகித் சர்மா அதிரடி காட்ட சுப்மன் கில்லும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா 50 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் தொடர்ந்து அதிரடி காட்டினார்.

சிறப்பாக விளையாடிய கில் 77 ரன்களில் ஆட்டம் இழந்தார் எனினும் ரோஹித் சர்மா தனது பேட்டிங் தொடர்ந்தார். இன்று பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்ற உத்வேகத்தில் களம் கண்ட அவர் சதத்தை நெருங்கும் போது தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டு அசத்தினார். இதன் மூலம் ரோகித் சர்மா ஒரு பவுண்டரி விளாசி தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். 84 பந்துகளில் எல்லாம் ரோகித் சர்மா 100 ரன்களைக் கடந்தார்.

ரோகித் சர்மா வெறித்தனம்.. இங்கிலாந்து மண்ணில் மாபெரும் சாதனை! முதல் வெளிநாட்டு ஓப்பனர் என பெருமை

ரோகித் சர்மா வெறித்தனம்.. இங்கிலாந்து மண்ணில் மாபெரும் சாதனை! முதல் வெளிநாட்டு ஓப்பனர் என பெருமை

இதில் 11 பவுண்டர்களும் நான்கு இமாலய சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 34 ஆவது சதத்தை ரோகித் சர்மா அடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு நாள் போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றிருக்கிறார். இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் 8 சதம் அடித்த முதல் வீரன் என்ற உலக சாதனையும் ரோகித் சர்மா படைத்தார்..

Story first published: Sunday, July 19, 2026, 22:34 [IST]
Other articles published on Jul 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+