Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புல சிறப்பான இடம்... கோலிய முந்திட்டாரு ஹிட்மேன்!

டெல்லி : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த டெஸ்ட் போட்டிகளில் சர்வதேச அளவில் அதிக ரன்களை எடுத்துள்ள வீரர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அதிக ரன்களை அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார் ரோகித் சர்மா. மாறாக கேப்டன் விராட் கோலி 10வது இடத்தில் உள்ளார்.

அதிக ரன்களை குவித்த வீரர்கள்

அதிக ரன்களை குவித்த வீரர்கள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடர், முன்னதாக ஆஸ்திரேலிய தொடர் என சிறப்பான ஆட்டங்களை தந்துள்ளார் துவக்க வீரர் ரோகித் சர்மா. இதையடுத்து தற்போது இவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் அதிக ரன்களை அடித்த 10 வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

கோலியை பின்னுக்கு தள்ளிய ரோகித்

கோலியை பின்னுக்கு தள்ளிய ரோகித்

இந்த பட்டியலில் அஜிங்க்யா ரஹானே மற்றும் விராட் கோலியும் இடம் பெற்றுள்ளனர். 5வது இடத்தில் ரஹானே உள்ளார். ஆயினும் அவர் 16 டெஸ்ட் போட்டிகளில் 27 இன்னிங்சில் விளையாடி 1062 ரன்களை அடித்துள்ளார். இதேபோல விராட் கோலி 13 போட்டிகளில் 21 இன்னிங்சில் விளையாடி 877 ரன்களை அடித்து 10வது இடத்தில் உள்ளார்.

அதிகபட்சமாக 212 ரன்கள்

அதிகபட்சமாக 212 ரன்கள்

ஆனால் 10 போட்டிகளில் 15 இன்னிங்சில் மட்டுமே விளையாடி ரோகித் சர்மா 947 ரன்களை விளாசி 8வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் இதில் 4 சதங்களும் 2 அரைசதமும் அடக்கம். 66.97 ஸ்டிரைக் ரேட்டில் இந்த ரன்களை அவர் குவித்துள்ளார். அதிகபட்சமாக ரஹானே 115 ரன்களையும், ரோகித் சர்மா 212 ரன்களையும் விராட் கோலி அவுட்டாகாமல் 254 ரன்களையும் அடித்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் இறுதிப்போட்டி

ஜூன் மாதத்தில் இறுதிப்போட்டி

இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஸ்சாக்னே முதலிடத்தையும் இங்கிலாந்தின் ஜோ ரூட் இரண்டாவது இடத்தையும் ஸ்டீவ் ஸ்மித் 3வது இடத்திலும் உள்ளனர். வரும் ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கனவே நியூசிலாந்து அணி தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 25, 2021, 16:40 [IST]
Other articles published on Feb 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+