Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுண்டரி லைனுக்கு அருகே வந்த பந்து.. யோசிக்காமல் ரோஹித் செய்த காரியம்.. வாயடைத்துப்போன கில்

குவஹாத்தி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு வயது அதிகமாகிவிட்டது என்றும், அவர் 2027 உலகக்கோப்பை வரை முழு உடற்தகுதியுடன் விளையாட முடியுமா என்றும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த விமர்சகர்களின் வாயை அடைக்கும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பவுண்டரி எல்லையில் காயம் ஏற்படுமே என்றெல்லாம் யோசிக்காமல் ரோஹித் சர்மா செய்த அசாத்திய பீல்டிங் அருகே இருந்த கேப்டன் சுப்மன் கில்லை வியப்பில் ஆழ்த்தியது.

குவஹாட்டியில் நடைபெற்ற இந்த போட்டியின் 36வது ஓவரை இளம் சுழற்பந்து வீச்சாளர் நமன் திர் வீசினார். முதல் பந்தில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டர் அமீர் ஜாங்கு இறங்கி வந்து சிக்சர் அடிக்க முயன்றார். ஆனால் பந்து சரியாக படாமல் டீப் மிட்-விக்கெட் திசையை நோக்கி உயரமாக காற்றில் பறந்தது.

Rohit Sharma Incredible Diving Save on Boundary Line in 2nd ODI Against West Indies Stuns Captain Shubman Gill

அந்த இடத்தில் வீரர்கள் யாரும் இல்லாததால் பந்து எளிதாக பவுண்டரிக்கு செல்லும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் சற்று தள்ளி பவுண்டரி கோட்டின் அருகே நின்றிருந்த ரோஹித் சர்மா, வலதுபுறமாக வேகமாக ஓடிவந்து, பந்தை தடுக்க முடிவு செய்து தரையில் விழுந்து டைவ் அடித்தார். பந்து பவுண்டரி எல்லையை தொடுவதற்கு ஒரு சில மில்லி வினாடிகளுக்கு முன்பாக, பந்தை சாதுரியமாக மைதானத்திற்குள் தள்ளிவிட்டார். பவுண்டரி செல்ல வேண்டிய பந்தை ஒற்றை ரன்னாக மாற்றி 3 ரன்களை மிச்சப்படுத்தினார்.

வியந்து பாராட்டிய கேப்டன் சுப்மன் கில்

ரோஹித் சர்மாவின் இந்த மின்னல் வேக அர்ப்பணிப்பைக் கண்டு கேப்டன் சுப்மன் கில் மற்றும் சக வீரர்கள் வாயடைத்துப் போய் கைதட்டி பாராட்டினர். கடுமையான வெயில் மற்றும் புழுக்கம் நிறைந்த குவஹாத்தி மைதானத்தில், 39 வயதில் தனக்கு காயம் ஏற்படுமே என யோசிக்காமல் ரோஹித் செய்த இந்த ஃபீல்டிங், அவர் எந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் தயாராக இருக்கிறார் என்பதை நிரூபித்துள்ளது.

இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்யும் வெஸ்ட் இண்டீஸ்

ரோஹித் சர்மா பீல்டிங்கில் உயிரைக் கொடுத்து செயல்பட்டாலும், வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து நொறுக்கினர். தொடக்க வீரர் ஜான் கேம்ப்பெல் 65 பந்துகளிலேயே சதம் அடித்து மிரட்டிய நிலையில், அடுத்து அமீர் ஜாங்கு மற்றும் ஷாய் ஹோப் ஆகியோரும் சதம் அடித்தனர்.

Story first published: Wednesday, September 30, 2026, 17:59 [IST]
Other articles published on Sep 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+