Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலிக்கு பாடம் புகட்டும் ரோகித்.. காரணமாக விளங்கும் தமிழக வீரர்.. இந்திய அணிக்குள் சண்டை ஆரம்பமா?

சென்னை: விராட் கோலியின் முடிவுகளுக்கு எதிர்மறையான முடிவுகளை எடுத்து ரோகித் சர்மா அதிரடி காட்டியுள்ளார்.

Recommended Video

T20 போட்டிகளில் அதிக அரைசதம்.. Virat Kohli-ன் சாதனையை முறியடித்த Rohit Sharma

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

டி20 உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு ஒயிட் வாஷ் செய்து பழிவாங்கினார் புதிய கேப்டன் ரோகித் சர்மா.

அஸ்வின் கொடுத்த கம்பேக்

அஸ்வின் கொடுத்த கம்பேக்

இந்த தொடரில் அனைவராலும் மிகவும் கூர்ந்து பார்க்கப்பட்டவர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான். கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்காக ஒரே ஒரு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கூட அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திர சாஹல் மீது மட்டும் கோலி அதிக நம்பிக்கை வைத்திருந்ததால் அஸ்வின் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வந்தார். டெஸ்ட் போட்டிகளிலும் அவருக்கு சரிவர வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

 விராட் கோலிக்கு பதிலடி

விராட் கோலிக்கு பதிலடி

அஸ்வினின் தேவை இருந்தும் பயன்படுத்தாமல் இருந்த விராட் கோலிக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பிசிசிஐ அவருக்கு வாய்ப்பு கொடுத்தது. தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்ட அஸ்வின் எதிரணி வீரர்களை திணறவைத்து அசத்தினார். மேலும் விக்கெட்களை வாரிக்குவித்தார். கோலியை மீறி ரோகித் சர்மா தான் அஸ்வினை கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல் கசிந்தது.

ரோகித்தின் ஆயுதம்

ரோகித்தின் ஆயுதம்

இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் நியூசிலாந்து தொடர் அமைந்தது. களத்தில் இந்திய அணிக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்ட போதெல்லாம் அஸ்வினை தான் மிகுந்த நம்பிக்கையுடன் அழைத்தார் ரோகித் சர்மா. அதற்கேற்றார் போலவே அவரும் விக்கெட் எடுத்து கொடுத்தார். அஸ்வின், தான் கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டிகளிலும் மொத்தமாக 9 விக்கெட்களை குவித்துள்ளார். இதனால் இனி வரும் போட்டிகளிலும் அஸ்வினை தனது முக்கிய ஆயுதமாக ரோகித் பயன்படுத்துவார் எனத் தெரிகிறது.

 சிறந்த கம்பேக்

சிறந்த கம்பேக்

அஸ்வின் குறித்து பேசிய ரோகித் சர்மா, அஸ்வினுக்கு இது ஒரு சிறந்த கம்பேக் ஆகும். அவர் தரமான பவுலர் என்பது அனைவருக்கும் தெரியும். டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்லாது ஒருநாள், டி20 போட்டிகளிலும் தன்னை இத்தனை ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார். அவரிடம் மோசமான ரெக்கார்ட்கள் என்பதே இல்லை. அமீரகத்திலும், தற்போது நியூசிலாந்து தொடரில் அவரின் பந்துவீச்சே, அவரின் தரத்தை கூறிவிடும்.

மறைமுக தாக்கு

மறைமுக தாக்கு

எதிரணியை கட்டுப்படுத்தி ஆட வேண்டும் என ஒரு கேப்டன் நினைத்தால், அதற்கு முதன்மை ஆயுதமாக அஸ்வின் தான் இருப்பார். அவரை போன்ற வீரர்களை அணியில் வைத்திருந்தால், மிடில் ஓவர்களில் விக்கெட் எடுப்பதற்கு எப்போதுமே வாய்ப்பு இருக்கும். அது எவ்வளவு முக்கியம் என்பதை உணர வேண்டும் என ரோகித் சர்மா கூறியுள்ளார். இந்த வார்த்தைகள் மறைமுகமாக விராட் கோலியை தாக்குவதாக தெரிகிறது.

Story first published: Monday, November 22, 2021, 19:34 [IST]
Other articles published on Nov 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+