சாதனை படைத்த ரோகித் சர்மா.. மறு நொடியே காயம்.. இந்தியாவுக்கு பின்னடைவு.. 26 பந்துகளில் சூர்யகுமார் 50
செயிண்ட் லூயிஸ் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது.
Recommended Video
டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி, இந்த ஆட்டத்தில் களமிறங்கியது.

பவர்பிளே
5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி களமிறங்கியது. ஆடுகளம் இரண்டாவது இன்னிங்சில் தொய்வாக மாறிவிடும். இதனால் பவர்பிளேவில் அடித்து ஆடினால் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருக்கும்.

சிக்சர்
இதனால் இந்திய அணி வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக தொடக்க வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசினார். இதனையடுத்து ரோகித் சர்மாவும் ஆக்கோரஷமாக விளையாடினார். தாம் எதிர்கொண்ட 2வது பந்திலேயே சிக்சரை விளாசினார்.

ரோகித் காயம்
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். இதனைத் தொடர்ந்த அதே ஓவரில் ரோகித் பவுண்டரிகளை விளாசினார். 5 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென்று அவருக்கு காயம் ஏற்பட்டது.

சூர்யா அரைசதம்
இதனால் வலியால் அவதிப்பட்ட ரோகித் சர்மா, பேட்டிங் செய்யாமல் பெவிலியன் நோக்கி நகர்ந்தார். ரோகித் சர்மாவுக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோகித் சர்மாவுக்கு வேறு ஏதேனும் காயம் இருந்தால், அவர் ஆசிய கோப்பையில் விளையாடுவாரா என்ற அச்சமும் எழுந்துள்ளது. மறுபக்கம் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் அரைசதம் விளாசினார்.


Click it and Unblock the Notifications