
நலம் விசாரிப்பு
துபாயில் உள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் 6 கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. இதில் தான் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர். பயிற்சி முடிந்ததும் இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசி நலம் விசாரித்து கொண்டு தான் செல்கின்றனர். அண்மையில் பாகிஸ்தான் வீரர் ஷாகின் ஆப்ரிடியை இந்திய வீரர்கள் நலம் விசாரித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பிரார்த்தனை
அப்போது விராட் கோலி தங்களுக்கு எதிராக தான் விளையாட போகிறார் என்று தெரிந்தும், நீங்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன் என்ற ஷாகின் ஆப்ரிடி கூறினார். இந்த நிலையில், நேற்று பயிற்சி முடிந்ததும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை ,ரோகித் சர்மா சந்தித்து பேசினார்.

ரோகித் கேள்வி
அப்போது, ரோகித்தை பார்த்ததும், பேராசிரியர் முன் மாணவர் நிற்பது போல கையை கட்டி பவ்வியமாக பாபர் அசாம் நின்றார். அப்போது பாபர் அசாம் குடும்பத்தை பற்றி ரோகித் சர்மா கேட்ட போது, திடீரென்று அவர் கேட்ட ஒரு வார்த்தை பாபர் அசாமை வெட்கப்பட வைத்தது. அது ஒன்றும் இல்லை, வயசு பசங்கள பார்த்து அனைவரும் கேட்கும் அதே கேள்வி தான்.

வெட்கப்பட்ட பாபர்
பாபர் எப்போது திருமணம் செய்து கொள்ள போறீங்க என ரோகித் சர்மா கேட்டதும், வெட்கமடைந்த பாபர், இன்னும் முடிவு செய்யவில்லை, இப்போதைக்கு இல்லை என்று பதில் அளித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது. களத்திற்கு வெளியே நண்பர்களாக சுற்றி திரியும் இரு வீரர்களும், களத்தில் மாறி விடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் ரசிகர்களுக்கு இது புது அனுபவமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications











