
எடை குறைப்பு
இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் கலந்து கொள்ளலாம், இந்திய அணியுடன் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளலாமே என்று ஆர்வமாக இருந்தவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் மீண்டும் தனிமைப்படுத்தி உள்ளது. கொரோனா விதிகளை மீறிவிட்டதாக கூறி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் இவரை தனிமைப்படுத்தி உள்ளது.

தனிமை
கொரோனா விதிகளை மீறியதாக கூறி ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.பயோ பபுளை மீறி இவர்கள் ஹோட்டலில் உணவு உட்கொண்டதற்காகவும், அங்கு ரசிகர் ஒருவரை கட்டிபிடித்ததற்காகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கோபம்
இந்த சம்பவத்தை முன்வைத்து ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் செய்தி நிறுவனங்கள் கேலி செய்து வருகிறது. ரோஹித் சர்மா இப்படி உணவுக்காக வெளியே சென்று விதிமுறைகளை மீறி இருக்க கூடாது என்று தொடர்ந்து கேலி செய்து வருகிறது. ஆஸ்த்திரேலியா அமைச்சர்கள் கூட ரோஹித் சர்மாவை கிண்டல் செய்ய தொடங்கி உள்ளனர்.

கோபம்
இதனால் இந்த 5 வீரர்கள் மீதும் பிசிசிஐ கோபத்தில் உள்ளது. தேவையில்லாத சர்ச்சையில் சிக்கியதாக கூறி, இந்த 5 வீரர்கள் மீதும் பிசிசிஐ கோபத்தில் உள்ளது. இதன் காரணமாக தற்போது ரோஹித் சர்மா எப்படியாவது தனது ஆட்டத்தில் அதிரடி காட்ட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். இதை தற்போது வலைப்பயிற்சியிலும் ரோஹித் சர்மா வெளிக்காட்டி வருகிறார்.

வலைப்பயிற்சி
வலைப்பயிற்சியில் மிகவும் உறுதியாக ரோஹித் சர்மா ஆடி வருகிறார். தனக்கு இருக்கும் கோபத்தை எல்லாம் இவர் களத்தில் காட்டி வருவதாக வலைப்பயிற்சியை நேரில் பார்த்த கிரிக்கெட் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். வலைப்பயிற்சியில் ரோஹித் சர்மா இதற்கு முன் இவ்வளவு அதிரடி காட்டியது இல்லை.

சிறப்பு
ஆனால் இந்தமுறை அவர் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறார். அவரிடம் கோபம் இருக்கிறது. காயம் காரணமாக புறக்கணிக்கப்பட்டது, ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்தின் கட்டுப்பாடு என்று பல விஷ்யங்களுக்காக ரோஹித் சர்மா கோபத்தில் இருக்கிறார். இதை கண்டிப்பாக அவர் தனது முதல் ஆட்டத்தில் வெளிப்படுத்துவார் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications