Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா-வுக்கு DXA ஸ்கேன் பரிசோதனை செய்ய பிசிசிஐ முடிவு.. அப்படி என்றால் என்ன? எதற்காக?

பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர்கள் பலரும் பெங்களூரில் முகாமிட்டு தங்களுடைய உடல் தகுதி பரிசோதனையில் கலந்து கொண்டிருக்கின்றனர். செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில் பும்ரா, சுப்மன் கில், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கு பெற உள்ளன.

Rohit sharma

இந்த தொடருக்கு முன்பு வீரர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் பங்கேற்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ரோகித் சர்மா இனி வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா தொடரில் தான் பங்கேற்க உள்ளார். இந்த தருணத்தில் ரோகித் சர்மா ஏன் இந்த பரிசோதனையில் பங்கேற்றார் என்ற கேள்வி இருந்தது.

பெங்களூரில் நடந்த சோதனையில் ரோகித் சர்மா வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த தருணத்தில் ரோகித் சர்மாவுக்கு டி எஸ் ஏ என்ற ஸ்கேன் பரிசோதனை செய்ய முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. இதற்காக ரோஹித் சர்மா இன்னும் சில நாட்கள் பெங்களூருவில் தங்கி பயிற்சியை ஈடுபட உள்ளார்.

இந்த நிலையில் டி எக்ஸ் ஏ எனப்படும் டெக்ஸா ஸ்கேன் பரிசோதனை என்றால் என்ன? அது எதற்கு செய்யப்படுகிறது என்பதை தற்போது பார்க்கலாம். இந்த ஸ்கேன் பரிசோதனை மூலம் மனிதர்களின் எலும்புத் தன்மை எவ்வாறு இருக்கின்றது? எலும்பு அடர்த்தி சரியான அளவில் உள்ளதா? எலும்பில் உள்ள சத்துக்கள் சரியாக இருக்கிறதா?

உடலில் எந்த பகுதி எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது? காயம் ஏற்படும் பகுதி என்ன? எந்த இடத்தில் எந்த சத்துக்கள் குறைவாக இருக்கிறது என்பதை முன்கூட்டியே கணித்து விட முடியும். இதன் மூலம் உடலில் பலவீனமான பகுதியை சரியாக கண்டுபிடித்து அதை பலப்படுத்துவதற்கான தனி பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் வீரர்களுக்கான சரியான அளவு சத்துக்கள் அளிக்கும் முயற்சிகள் எடுக்கப்படும்.

இதன் மூலம் வீரர்கள் அடிக்கடி காயம் ஏற்படாமல் இருக்க தடுக்கப்படும். இதுதான் தற்போது ரோகித் சர்மாவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதத்திற்கு முன்பு தனது உடல் தகுதியை 100 சதவீதம் எட்டுவதற்காக தான் ரோகித் சர்மா இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, September 1, 2025, 13:43 [IST]
Other articles published on Sep 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+