Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு பிடிச்ச இந்திய பேட்ஸ்மேன்... அவர அவ்ளோ பிடிக்கும்... ஜே.பி டுமினி பரவசம்

கேப் டவுன் :சர்வதேச அளவில் தனக்கான ரசிகர்களை ஏராளமாக கொண்டிருப்பவர் இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா.

இவரின் பிரத்யேகமான அடித்து ஆடும் ஷாட்கள் மூலம் பல்வேறு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களும் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஜே.பி. டுமினி தனக்கு பிடித்தமான இந்திய வீரர் என்றால் அது ரோகித் சர்மா தான் என்று தெரிவித்துள்ளார்.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, தன்னுடைய பிரத்யேகமான பேட்டிங் ஸ்டைலால் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். இதுமட்டுமின்றி இவருக்கு சக வீரர்களும் ரசிகர்களாக உள்ளனர். பல்வேறு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களுக்கும் பிடித்தமான வீரராக ரோகித் சர்மா உள்ளார்.

4 முறை கோப்பை வெற்றி

4 முறை கோப்பை வெற்றி

குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் துணை கேப்டனாகவும் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ள ரோகித் சர்மா, பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும் உள்ளார். மேலும் ஐபிஎல் கோப்பையை நான்கு முறை தனது அணிக்காக அவர் பெற்று தந்துள்ளார்.

ஜே.பி. டுமினி பரவசம்

ஜே.பி. டுமினி பரவசம்

இந்நிலையில் முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஜே.பி. டுமினி தனக்கு இந்திய பேட்ஸ்மேன்களின் ரோகித் சர்மாதான் மிகவும் பிடித்தமானவர் என்று தெரிவித்துள்ளார். முன்னாள் ஜிம்பாப்வே பௌலர் பொம்மி ம்பாங்வாவுடன் நடத்திய இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் பேசிய டுமினி, ரோகித்தின் பிக்-அப் புல் ஷாட்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

648 ரன்கள் குவித்து சாதனை

648 ரன்கள் குவித்து சாதனை

கடந்த ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் வெறும் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடி 648 ரன்களை குவித்தவர் ரோகித் சர்மா. இதன் சராசரி 81.00. மேலும் 5 சதங்களையும் அவர் குவித்து சாதனை புரிந்துள்ளார். 224 ஒருநாள் போட்டிகள், 108 டி20 போட்டிகள் மற்றும் 32 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள ரோகித் சர்மா, 14,029 ரன்களை குவித்துள்ளார்.

Story first published: Sunday, June 21, 2020, 17:22 [IST]
Other articles published on Jun 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+