Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி..இந்திய அணி கேப்டன் மாற்றம்..BCCI டிவிஸ்ட்.. யாருக்கு வாய்ப்பு?

மும்பை : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில் தற்போது மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது.

முதல் ஒரு நாள் போட்டி மும்பையில் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.

யார் கேப்டன்?

யார் கேப்டன்?

இதனால் பிசிசிஐ முழு பலத்துடன் கூடிய அணியை அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் குடும்ப உறுப்பினருக்கு திருமணம் நடைபெறுவதால் அவர் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.இது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க வீரர் யார்?

தொடக்க வீரர் யார்?

ஏற்கனவே ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஒரு நாள் தொடரில் விளையாடாத நிலையில் தற்போது ரோகித் சர்மாவும் விலகி இருக்கிறார். இதனால் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி யாரை சேர்க்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது இந்திய அணி முன் இரண்டு வாய்ப்புகள் உள்ளன.ஒன்று ரோகித் சர்மாவுக்கு பதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான இஷான் கிஷனை அணியில் சேர்த்து வாய்ப்பு வழங்கலாம்.

3 ஸ்பின்னர்

3 ஸ்பின்னர்

இது நல்ல முடிவாக இருக்கும். இல்லையெனில் கே எல் ராகுலை தொடக்க வீரராக களம் இறக்கலாம். அப்படி செய்துவிட்டு அக்சர் பட்டேலை கூடுதல் வீரராக இந்திய அணியில் சேர்க்கலாம். ஆனால் வான்கடே மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு அவ்வளவு சாதகமாக இருக்காது. மைதானத்தின் ஒரு பகுதியில் பவுண்டரி எல்லை மிகவும் குறைவு என்பதால் மூன்று ஸ்பின்னர்கள் விளையாடுவது சரியான முடிவாக இருக்காது.

கூடுதல் ஆல்ரவுண்டர்

கூடுதல் ஆல்ரவுண்டர்

இல்லையெனில் கே எல் ராகுல் தொடக்கவீராக வைத்துவிட்டு இந்திய அணி கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் இந்திய அணியின் பந்து வீச்சு பலமாகும். ஆனால் ஹர்திக் பாண்டியா தொடக்க வீரராக இஷான் கிசனை தான் சேர்த்துக் கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மா இல்லாத நிலையில் சுப்மன் கில், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற முடியும்.

Story first published: Wednesday, March 15, 2023, 23:10 [IST]
Other articles published on Mar 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+