Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினே படைக்காத சாதனை.. ரோகித் சர்மாவுக்கு கிடைத்த வாய்ப்பு. ஆசிய கோப்பையில் பெருமிதம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ஆம் தேதி தொடங்கும் நிலையில் அனைத்து வீரர்களும் அதற்காக தயாராகி வருகின்றனர்.

Recommended Video

IND vs PAK போட்டி குறித்து Rohit Sharma தரமான விளக்கம்

இந்திய அணி நாளை மறுநாள் துபாய் புறப்பட்டு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் ரோகித் சர்மா ஒரு புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.

15வது ஆசிய கோப்பை

15வது ஆசிய கோப்பை

சச்சின் கூட செய்யாத இந்த சாதனையை ரோகித் சர்மாவுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடருக்கு அடுத்ததாக பெரிய தொடராக கருதப்படுவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் தான். 1984 ஆண்டு முதல் நடைபெற்ற இந்த தொடர் தற்போது 15-வது சீசனை எட்டி உள்ளது.

6 தொடர்

6 தொடர்

உலகத்திலேயே கிரிக்கெட் ஆசிய கண்டத்தில் மட்டும்தான் அதிக மக்களால் பார்க்கப்படுகிறது.இதனால் ஆசிய கிரிக்கெட் போட்டி எப்போதுமே ரசிகர்களின் தனி மதிப்பை பெற்ற தொடராகும்.இந்த சிறப்புமிக்க தொடரில் அதிக முறை விளையாடிய வீரர்கள் என்ற பட்டியலில் ரோகித் சர்மாவும் சச்சின் டெண்டுல்கரும் தல ஆறு தொடர்களில் பங்கேற்று சமனில் உள்ளனர்.

ரோகித்துக்கு வாய்ப்பு

ரோகித்துக்கு வாய்ப்பு

இந்த நிலையில் ரோகித் சர்மா வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றால் அதிக முறை ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை படைப்பார். இவர்களுக்கு அடுத்தபடியாக சிஎஸ்கே வீரர்கள் ஜடேஜா, தோனி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் ஆகியோர் தலா ஐந்து முறை விளையாடியுள்ளனர்.

மற்றவர்கள் எத்தனை?

மற்றவர்கள் எத்தனை?

விராட் கோலி ,கும்ப்ளே, சுரேஷ் ரெய்னா, சித்து ஆகியோர் தலா நான்கு முறை ஆசிய கோப்பை தொடரில் விளையாடி இருக்கின்றனர். ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஜெயசூர்யா பெற்றுள்ளார். இதேபோன்று அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை மலிங்கம் பெற்றுள்ளார். இதுவரை இந்திய அணி அதிகபட்சமாக ஏழு முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது,

Story first published: Sunday, August 21, 2022, 18:07 [IST]
Other articles published on Aug 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+