Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பீப் சர்ச்சை.. ஆஸி. கொடுத்த அழுத்தம்.. களத்தில் சொல்லி சொல்லி அடித்த ரோஹித்.. ஹிட்மேன் இஸ் பேக்!

சிட்னி: பல தடங்கல்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு இடையில் ஆஸ்திரேலியாவில் இன்று பேட்டிங் இறங்கிய ரோஹித் சர்மா மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்.

ஆஸ்திரேலிய தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆர்வமுடன் இருந்தவர் ரோஹித் சர்மா. ஆனால் ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாகவில்லை.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் டெஸ்ட் போட்டியில் ஆடுவதும் சந்தேகமாக இருந்தது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை.

குணமடைந்தார்

குணமடைந்தார்

அதன்பின் காயம் குணமடைந்து, ரோஹித் தனது பிட்னஸை நிரூபித்து இந்திய அணிக்குள் மிகவும் கஷ்டப்பட்டு திரும்பினார். இவர் உடல் எடை அதிகமாக இருக்கிறார், பிட்டாக இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதற்காக ரோஹித் சர்மா உடல் எடையையும் குறைத்து புதுப்பொலிவுடன் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பினார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா இணைந்து பின்பும் கூட அவரால் நிம்மதியாக பயிற்சி மேற்கொள்ளவில்லை. இந்திய அணியில் அவர் பயிற்சியில் இணைந்த மறுநாளே மழை பெய்து பயிற்சி தடைபட்டது. இன்னொரு பக்கம் ரோஹித் சர்மா கொரோனா விதிகளை மீறியதாக சர்ச்சையில் சிக்கினார்.

சர்ச்சை

சர்ச்சை

கொரோனா விதிகளை மீறி ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் ஹோட்டலில் உணவு உட்கொண்டதாக தனிமைப்படுத்தப்பட்டனர். தனியார் ஹோட்டல் ஒன்றில் உணவு உட்கொண்ட இவர்கள் அங்கு ரசிகர் ஒருவரை கட்டிபிடித்ததாக கூறப்படுகிறது. இதில் ரோஹித் சர்மா பீப் சாப்பிட்டார் என்றும் கூறி சர்ச்சையாக்கப்பட்டது.

கவனம்

கவனம்

இதனால் பயிற்சியில் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் ரோஹித் சர்மா சிரமப்படும் நிலை ஏற்பட்டது . ஆனால் தற்போது அதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி வருகிறார். பல தடங்கல்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு இடையில் ஆஸ்திரேலியாவில் இன்று பேட்டிங் இறங்கிய ரோஹித் சர்மா மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்.

டெஸ்ட்

டெஸ்ட்

ரோஹித் சர்மாவின் டெஸ்ட் ஆட்டம் பெரிய அளவில் முன்னேறி உள்ளது. கிறிஸ் லைன் பவுலிங்கில் திணறும் ரோஹித் இன்று லைனை சிறப்பாக எதிர்கொண்டார். அதேபோல் ஹசல்வுட், கும்மின்ஸ் பவுலிங்கையும் மிகவும் நேர்த்தியாக ரோஹித் சர்மா எதிர்கொண்டார். ஒரு வருடத்திற்கு பின் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஆடுகிறார்.

10 மாதம்

10 மாதம்

10 மாதங்களுக்கு பின் சர்வதேச போட்டிகளில் ரோஹித் சர்மா ஆடுகிறார். ஆனால் இதற்கான அறிகுறிகள் எதுவும் இன்றி டென்சன் இல்லாமல் ரோஹித் சர்மா ஆடி வருகிறார். அதிலும் ரோஹித் சர்மா இன்று ஷாட்களை தேர்வு செய்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.

பவுன்சர்

பவுன்சர்

பவுன்சர், ஸ்விங், யார்க்கர் என்று எதற்கும் கலங்காமல் அவர் ஆடிய விதம் நேர்த்தியாக இருந்தது. முதல் 22 ரன்களை எடுக்கவே ரோஹித் சர்மா 60 பந்துகளை எடுத்துக்கொண்ட விதம் இவரின் டெஸ்ட் இன்னிங்ஸ் திறமையை காட்டுகிறது. இதற்கு பின் வரும் ஓவர்களில் ரோஹித் சர்மா அவுட்டானாலும் கூட அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது.

Story first published: Friday, January 8, 2021, 11:47 [IST]
Other articles published on Jan 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+