For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொரோனாவிலிருந்து மீண்ட ரோகித் சர்மா.. நடப்பு போட்டியிலேயே விளையாடுகிறார்.. பிசிசிஐ பலே திட்டம்

எட்ஜ்பாஸ்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கொரோனா தொற்று காரணமாக விலகினார் .

இங்கிலாந்துக்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா பேட்டிங்கில் அதிக ரன்களை குவித்து இருந்தார்.

ஆனால் பிளேயிங் லெவனில் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது .

ரோகித் இல்லாததால் தடுமாற்றம்

ரோகித் இல்லாததால் தடுமாற்றம்

முதல் இன்னிங்ஸில் கூட ரோகித் சர்மா இல்லாததால் புஜாரா தொடக்க வீரராக களமிறங்கி சொற்ப ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 98 ரன்கள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது . பந்த் , ஜடேஜா ஜோடி இந்திய அணி சரிவிலிருந்து மீட்டது. இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் வரும் ஏழாம் தேதி தொடங்குகிறது. இதில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கொரோனா முடிவு

கொரோனா முடிவு

இதில் ரோகித் சர்மா விளையாடுவாரா? மாட்டாரா என்று சந்தேகம் எழுந்தது . ஆனால் கொரோனாவில் இருந்து ரோகித் சர்மா மீண்டதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. ரோகித் சர்மாவுக்கு நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்தது. இதனை அடுத்து ஒரு வார காலம் ஹோட்டலில் தனிமையில் இருந்த ரோகித் சர்மா இந்திய அணியுடன் இணைய உள்ளார்.

பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

இந்த நிலையில் தான் பிசிசிஐ ஒரு திட்டம் போட்டுள்ளது தெரியவந்துள்ளது . அந்தத் திட்டத்திற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றாலும் முழுமையாக மறுக்க முடியாது. அதாவது ஏதாவது ஒரு பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டால், அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவை களம் இறக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது . ஆனால் அதற்கான வாய்ப்புகள் ஏற்படுவது மிக மிகக் குறைவு என்பதால் ரோகித் சர்மாவை டி20 போட்டிக்கு தயாராக டிராவிட் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

இதனையடுத்து நாளை நடைபெறும் இரண்டாவது டி20 பயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மாவை பிளேயிங் லெவனில் களமிறக்கலாம் என்று பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் வரும் ஏழாம் தேதி தொடங்க உள்ள முதல் போட்டிக்கு ரோகித் சர்மா தயாராகி விடுவார்.

Story first published: Saturday, July 2, 2022, 20:35 [IST]
Other articles published on Jul 2, 2022
English summary
Rohit sharma is recovered from corona - Reportsகொரோனாவிலிருந்து மீண்ட ரோகித் சர்மா.. நடப்பு போட்டியிலேயே விளையாடுகிறார்.. பிசிசிஐ பலே திட்டம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+