Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்... சூப்பர் ஓபனிங் செஞ்சுருக்காரு ஹிட்மேன்... மிகச்சிறப்பு!

டெல்லி : சர்வதேச ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் ரேங்கிங் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சர்வதேச அளவில் ரோகித் சர்மா, ரிஷப் பந்த், விராட் கோலி ஆகியோர் முக்கிய இடங்களை பிடித்துள்ளனர்.

கடந்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள நிலையில் இந்த சிறப்பான இடங்கள் கிடைத்துள்ளது.

அதிரடி பேட்ஸ்மேன்

அதிரடி பேட்ஸ்மேன்

ரோகித் சர்மா குறைந்த ஓவாகள் போட்டிகளின் ஹிட்மேனாக வலம் வருபவர். அவர் எப்போதும் தனது அதிரடிகளை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் சிறப்பான வீரராக திகழ்பவர். இதில் பல்வேறு சாதனைகளையும் அவர் தொடர்ந்து செய்து வருகிறார். மேலும் முந்தைய சாதனைகளையும் முறியடித்து வருகிறார்.

சிறப்பான ரோகித்

சிறப்பான ரோகித்

இந்நிலையில் சமீப காலங்களில் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் தனது சிறப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதையடுத்து டெஸ்ட் போட்டிகளில் தரவரிசை பட்டியலிலும் தற்போது இடம்பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

3 வீரர்கள் இடம்பிடிப்பு

3 வீரர்கள் இடம்பிடிப்பு

இதில் இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர். முக்கியமாக ரோகித் சர்மா பேட்ஸ்மேன்கள் வரிசையில் 8வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் சிறப்பான துவக்க வீரராகவும் அவர் சிறந்த இடத்தை பிடித்துள்ளார். அவருடைய டெஸ்ட் கேரியரில் இது சிறப்பான சாதனையாக உள்ளது.

ரிஷப் சிறப்பு சாதனை

ரிஷப் சிறப்பு சாதனை

இதனிடையே, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி தரவரிசையில் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளது இதுவே முதல்முறை இந்த சாதனையை இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் பெற்றுள்ளார். அவர் பிடித்துள்ள இடம் 6. 23 வயதில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

3 வீரர்கள் இடம்பிடிப்பு

3 வீரர்கள் இடம்பிடிப்பு

இந்த டெஸ்ட் தரவரிசையில் கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகளுடன் 5வது இடத்தை பிடித்துள்ளார். ரிஷப் பந்த் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தலா 747 புள்ளிகளுடன் 6வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் கடந்த டெஸ்ட் தொடர்களில் சிறப்பான செயல்பாடுகளை நிரூபித்துள்ள நிலையில் முதல் 10 இடங்களில் 3 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Story first published: Wednesday, May 5, 2021, 19:54 [IST]
Other articles published on May 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+