ரோகித் சர்மா மீது கை வைத்த அகார்கர்.. இப்போ பதவிக்கே ஆபத்து.. கடுப்பான பிசிசிஐ
மும்பை: ரோஹித் சர்மாவை ஓய்வு பெற வைக்க அகார்கர் எடுத்த மயற்சிகள் தற்போது அவருக்கே பெரிய ஆப்பாக மாறி இருக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் ரோஹித் சர்மா சதம் அடிப்பதற்கு முன்பு நடந்த நிகழ்வுகள், தற்போதைய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் முடிவை பிசிசிஐ மறுபரிசீலனை செய்ய தூண்டியுள்ளது.
கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா சோபிக்காததை அடுத்து, தேர்வாளர்கள் அடுத்தகட்ட வீரர்களை நோக்கி நகர விரும்புவதாகவும், தனது எதிர்காலம் குறித்த முடிவை ரோஹித்தின் கைகளிலேயே விட்டுவிட்டதாகவும் செய்திகள் பரவின.

தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தபோது, கசிந்த இந்த தகவல்களால் ஒட்டுமொத்த கவனமும் ரோஹித் மீது திரும்பியது. இதனால் மூன்றாவது ஒருநாள் போட்டி அவரது விடைபெறும் போட்டியாக இருக்கலாம் என்று பரவலாக கருதப்பட்டது.
கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் விளையாடிய ரோஹித் சர்மா, அபோட்டியில் தனது சிறப்பான சதத்தின் மூலம் தகுந்த பதிலடி கொடுத்தார். இந்திய அணி தோல்வியடைந்தாலும், முன்னாள் கேப்டனான தன்னிடம் இன்னும் பல சாதனைகளை படைக்கும் திறன் உள்ளது என்பதை இந்த இன்னிங்ஸ் மூலம் அவர் நிரூபித்தார்.
இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா, ரோஹித் சர்மா இந்தியாவின் ஒருநாள் உலகக் கோப்பை திட்டங்களில் இருக்கும் வரை, அவர் தொடர்ந்து தேசிய அணியில் வழக்கம்போல் இடம்பெறுவார் என்று கூறி அந்த செய்திகளை நிராகரித்தார்.
ரோகித் சர்மா விவகாரத்தை சரியாக கையாளாததால், இஅஜித் அகர்கரை தேர்வு குழு தலைவராக நீடிக்க வேண்டுமா என்பதை பிசிசிஐ மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (COE) உடன் தற்போது இணைந்துள்ள முன்னாள் மாபெரும் பேட்ஸ்மேன் வி.வி.எஸ் லக்ஷ்மண், அகர்கருக்கு பதிலாக தேர்வு குழு தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படும் முக்கிய நபராக விளங்குகிறார், அகர்கரின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் முடிவடைகிறது.


Click it and Unblock the Notifications

