Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலிக்கு மறைமுக அட்வைஸ்.. கேப்டன் குறித்து கிளாஸ் எடுத்த ரோகித்.. பாக். போட்டி தொடர்பாக பதில்

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.இந்திய அணி அடுத்த சில நாட்களில் ஆசிய கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக துபாய் செல்கிறது.

Recommended Video

Virat Kohli Century அடிக்காம Silentஆ பண்ண சாதனைகள் என்ன?

இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆசிய கோப்பை தொடருக்காக விசேஷ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியை தற்போது காணலாம்.

கேப்டனாக என்னுடைய முதல் பணி வீரர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டியது தான். வீரர்கள் நெருக்கடியை உணரக்கூடாது அணிக்குள் வருபவர்கள் ஆட்டத்தை மகிழ்ச்சியாக விளையாட வேண்டும். ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருந்தால் தான் போட்டியில் இருக்கும் நெருக்கடி அவர்களால் உணர முடியாது. நீங்கள் கிரிக்கெட் விளையாடும்போது உங்களுக்கு அழுத்தம் ஏற்படுவது இயற்கை தான்.

 உதவி செய்ய மாட்டார்கள்

உதவி செய்ய மாட்டார்கள்

பந்தை நீங்கள் கையில் வைத்திருக்கும் போது ஒரு பந்துவீச்சாளராக உங்களுக்கு நெருக்கடி ஏற்படும்.ஆடுகளத்தில் நடுவே நீங்கள் பேட்டிங் செய்யும்போது ஒரு பேட்ஸ்மேனாகவும் உங்களுக்கு ஒரு நெருக்கடி ஏற்படும். அதை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பது பொறுத்துதான் ஆட்டம் இருக்கிறது.அழுத்தத்தை கையாள்வதில் கேப்டனும் பயிற்சியாளரும் வேறு யாரும் உதவி செய்ய மாட்டார்கள்.

கோலிக்கு அட்வைஸ்?

கோலிக்கு அட்வைஸ்?

நாம் தான் அதை பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக் கொள்வதை என்னுடைய முதல் பணியாக நான் கருதுகிறேன். ஒரு சில வீரர்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று நமக்கு புரியும். அவர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்.உங்களிடமிருந்து அணி என்ன எதிர்பார்க்கிறது.உங்களுக்கு என்ன தேவை என்பதை நாம் அவர்களிடம் பேச வேண்டும்.

என்ன செய்யனும்?

என்ன செய்யனும்?

கேப்டனாக, எனக்கு அணியில் இருக்கும் வீரர்கள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.அவர்களுடைய பலங்கள் பலவீனங்கள் நான் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான ஆலோசனையை கேப்டனாக நான் வழங்க வேண்டும். அவர்களுடன் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அணி உன்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை ஒரு கேப்டனாக நான் அவருக்கு புரிய வைத்து விட்டால், அந்த வீரர் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தருவார்கள் அதை நோக்கி தான் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தியா Vs பாகிஸ்தான்

இந்தியா Vs பாகிஸ்தான்

இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து நான் பெரிதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. இது தேவையில்லாத அழுத்தத்தை வீரர்களுக்கு ஏற்படுத்தும். அணியில் நாங்கள் அதை சாதாரணமாக ஆட்டமாக தான் கருதுகிறோம். ஒரு சில வீரர்கள் பாகிஸ்தான் உடன் புதிதாக விளையாடுகிறார்கள். அவர்களுக்கு இது நல்ல அனுபவமாக இருக்கும். வெளியே வேண்டுமெனாலும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துங்கள். ஆனால் நாங்கள் அதனை சாதாரணமாக தான் எடுத்துக் கொள்வோம்.

Story first published: Saturday, August 20, 2022, 18:35 [IST]
Other articles published on Aug 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+