விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்து மிரண்டு விட்டேன்.. அது தான் சிறந்த இன்னிங்ஸ்.. ரோகித் பாராட்டு
மொஹாலி: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை முதல் தொடங்குகிறது.
இது விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். இதற்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலியின் பயணம் குறித்து பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

கோலியே காரணம்
விராட் கோலியின் இந்த டெஸ்ட் பயணம் மகத்தானது, சிறப்பு மிக்கது. அவர் இந்திய அணிக்காக பல நல்ல செயல் திட்டங்களை மேற்கொண்ட பல மாற்றத்தை அணிக்காக கொண்டு வந்துள்ளார். அதன் மூலம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. 5, 6 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி உள்ளோம், அதற்கு காரணம் விராட் கோலி தான்.

நல்ல விஷயம்
இந்தியா சாதித்தற்கான புகழ் அனைத்தும் கோலிக்கே உரியது தான். விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது நல்ல விசயம்.இது கோலிக்கும், அணிக்குமே நல்ல உத்வேகத்தை அளிக்கும். நாங்கள் வெற்றிக்காக விளையாடுவோம்.

சிறந்த இன்னிங்ஸ்
விராட் கோலியின் சிறந்த இன்னிங்ஸ் எது என்று கேட்டால், 2013 தென்னாப்பிரிக்க மண்ணில் அவர் அடித்த சதத்தை தான் சொல்வேன். முதல் முறையாக சீனியர்கள் இல்லாமல், கடினமான ஆடுகளத்தில் விளையாடினோம். ஆனால் அன்று அவர் அடித்த சதம் எனக்கு இன்னும் மனதில் நீங்காமல் உள்ளது. என்னை பொறுத்தவரையில் கோலியின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் அது.
Recommended Video

ஆஸி மண்ணில் வெற்றி
விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக சாதித்ததில் என மனதில் நீங்காதவை என்றால், அது ஆஸ்திரேலிய மண்ணில் பெற்ற டெஸ்ட் தான். எந்த அணியும் செய்யாததை நாங்கள் அங்கு செய்தோம். விராட் கோலியின் கேப்டன்ஸி மற்றும் பேட்டிங் பிரமிக்கும் வகையில் அமைந்தது. 100வது டெஸ்ட் அவருக்கு சிறந்த வகையில் அமையும் என நம்புகிறேன்.


Click it and Unblock the Notifications