Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எவ்வளவு நாள் உழைச்சோம் தெரியுமா? பெருமையா இருக்கு.. நீண்ட நாட்களுக்கு மறக்க மாட்டேன் - ரோகித் பேச்சு

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி எட்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.

குறிப்பாக டாஸ் இழந்து முதலில் பந்துவீச்சை மேற்கொண்ட இந்திய அணி 50 ரன்கள் இலங்கையை சுருட்டியது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய வீரர்கள் விக்கெட்டை இழக்காமல் 6.1ஓவர்கள் எல்லாம் வெற்றி இலக்கை எட்டினர்.

Rohit sharma lauds team performance and will cherish this win for long time

இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா ஒட்டுமொத்த அணியின் செயல்பாடும் சிறப்பாக இருந்ததாக பாராட்டினார். இதுகுறித்து பேசிய அவர் இறுதிப்போட்டியில் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவது எங்கள் வீரர்களின் மனநிலையை காட்டுகிறது. இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சில் சிறப்பான தொடக்கத்தை எங்களுடைய வீரர்கள் அளித்தார்கள்.

இதேபோன்று பேட்டிங்கிளும் நாங்கள் சிறப்பாக எதிர் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறோம். போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நான் ஸ்லிப்பில் நின்று நடந்ததையெல்லாம் பார்த்து மிகவும் பெருமையாக உணர்ந்தேன். எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் கடந்த சில மாதங்களாகவே கடும் உழைப்பை வெளிப்படுத்தினார்கள். தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மனதளவில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.

இதுபோன்ற ஒரு செயல்பாட்டை பார்க்கும்போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றியை நீண்ட நாட்களுக்கு நாங்கள் மறக்க மாட்டோம். இவ்வளவு எளிதாக வெற்றி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது எங்கள் அணியில் உள்ள வீரர்களின் தனித்துவ திறமையை காட்டுகிறது. இறுதிப் போட்டியில் இது நடந்ததற்கு சிராஜுக்கு தான் பாராட்டுகள் போய் சேர வேண்டும்.

ஏனென்றால் இதுபோன்ற ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் இப்படி பந்து வீசுவது என்பது மிகவும் அரிது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு பந்துவீச்சை நான் பார்த்தேன். ஒரு அணியாக எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதனை நாங்கள் சிறப்பாக செய்திருக்கிறோம். இதற்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் தொடரும் உலக கோப்பையும் தான் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம்.

பாகிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியில் இசான் கிஷனும் ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக பந்து வீசினார்கள். அதன்பிறகு ராகுலும் விராட் கோலியும் சதம் அடித்தார்கள். இதைத்தவிர சுப்மன் கில்லும் பேட்டிங்கில் கலக்கி வருகிறார். இந்த தொடரில் பல வீரர்கள் பல நிலைகளில் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்று ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்தார்.

Story first published: Sunday, September 17, 2023, 19:42 [IST]
Other articles published on Sep 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+