Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐயோ ! டி20 யில் அவங்க ரொம்ப டேஞ்சர்..பெரிய சவாலான தொடராக இருக்கும்..எதிரணிக்கு ரோகித் சர்மா பாராட்டு

டிரிண்டாட்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடர் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Recommended Video

IND vs WI Rohit Sharma மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தல் *Cricket

டி20 போட்டியில் வெஸ்ட் அணியை, அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவத மிகவும் கடினமான காரியம் ஆகும்.

இந்த நிலையில், 10 நாட்கள் ஒய்வுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா பிளேயிங் லெவனுக்கு திரும்பியுள்ளார்.

சவால்கள் நிறைந்தது

சவால்கள் நிறைந்தது

இது குறித்து பேசிய ரோகித் சர்மா, சிறிது ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவது எப்போதும் மகிழ்ச்சி தான். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடர் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எப்படி விளையாடுவார்கள் என்று எல்லாருக்கும் நன்றாக தெரியும்.

குறிக்கோள்

குறிக்கோள்

இந்திய அணியை பொறுத்தவரை நடப்பு தொடரில் இருந்து சில மாற்றங்களை செய்ய உள்ளோம். ஒவ்வொரு தொடரிலும் புதியதாக எதாவது செய்ய வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். சமீபத்தில் பெற்ற வெற்றியை வைத்து நாங்கள் அலட்சியமாக விளையாட மாட்டோம். கிரிக்கெட்டில் எப்போதுமே இன்று நடப்பது தான் முக்கியம்.

மேட்ச் வின்னர்கள்

மேட்ச் வின்னர்கள்

கடந்த காலத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக பெற்ற வெற்றி தற்போது உதாவது. டி20 கிரிக்கெட் எப்போதுமே ஒரு நகைச்சுவையான விளையாட்டு தான். ஏன் என்றால் ஏதேனும் ஒரு வீரர் நினைத்தால், ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். அப்படி பல மேட்ச் வின்னர்கள், வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த நாங்கள் தயாராகி வருகிறோம்.

மோசமான கிரிக்கெட்

மோசமான கிரிக்கெட்

உலகக் கோப்பையில் எங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக நாங்கள் மோசமாக விளையாடுகிறோம் என்று அர்த்தமில்லை. மோசமாக விளையாட நினைத்தால் எங்களால் 80 சதவீத போட்டிகளில் வெற்றி பெற முடியாது. இப்போது வீரர்களுக்கு நாங்கள் முழு சுதந்திரம் வழங்குகிறோம். சுதந்திரம் இருந்தால் மட்டுமே சிறப்பாக விளையாட முடியும்.

Story first published: Friday, July 29, 2022, 21:45 [IST]
Other articles published on Jul 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+