Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி என்ன பண்றாருன்னு பார்த்துதான் அவர் கேப்டன்சி கத்துகிட்டார்.. உண்மையை போட்டுத் தாக்கிய ராயுடு!

சென்னை : இந்தியா அணியின் முன்னணி வீரர் ரோஹித் சர்மா கேப்டன்சியை, தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டதாக கூறி உள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு.

Recommended Video

Rohit Sharma learned Captaincy from Dhoni says Rayudu.

இன்ஸ்டாகிராம் லைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பக்கத்தில் பேட்டி அளித்தார் அந்த அணியின் வீரர் அம்பதி ராயுடு.

அந்த பேட்டியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது ரோஹித் சர்மா - தோனி கேப்டன்சி பற்றி பேசினார்.

ராயுடு வெளிப்படையான பேச்சு

ராயுடு வெளிப்படையான பேச்சு

ரோஹித் சர்மா, தோனியிடம் கேப்டன்சி கற்றுக் கொண்டார் என்றும், இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்றும், மேலும், ரோஹித் சர்மா தோனியின் வெற்றிகளை அடைய நீண்ட காலம் ஆகும் என்றும் வெளிப்படையாக பேசினார்.

வெற்றிகரமான தோனி

வெற்றிகரமான தோனி

தோனி நீண்ட காலம் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து எந்த இந்திய கேப்டனும் பெறாத பல முக்கிய வெற்றிகளை, உலகக்கோப்பைகளை பெற்றுக் கொடுத்துள்ளார். துணை கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாத போது அணியை வெற்றிகரமாக வழிநடத்தி தன் முத்திரையை பதித்துள்ளார்.

ஐபிஎல் களம்

ஐபிஎல் களம்

அனால், தோனி - ரோஹித் சர்மா கேப்டன்சி பற்றி ஒப்பிடும் களம் ஒன்று உள்ளது. அது ஐபிஎல். 2008 முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக தோனி பல உயரங்களை தொட்டுள்ளார். மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்துள்ளார்.

தோனி அளவுக்கு இல்லை

தோனி அளவுக்கு இல்லை

மறுபுறம் ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நான்கு முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த கேப்டனாக உள்ளார். ஆனாலும், தோனி அளவுக்கு அணியை அதிக இறுதிப் போட்டி மற்றும் பிளே-ஆஃப் அழைத்துச் சென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தோனியிடம் கற்றுக் கொண்டார்

தோனியிடம் கற்றுக் கொண்டார்

இந்த நிலையில், ரோஹித் சர்மாவே தன் கேப்டன்சியை தோனியிடம் இருந்து தான் கற்றுக் கொண்டார் என போட்டுத் தாக்கி உள்ளார் அம்பதி ராயுடு. மேலும், ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் தான் உட்பட அனைவரும் தோனியின் கீழ் ஆடியவர்கள் தான் எனவும் அழுத்தமாக கூறி உள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ராயுடு

மும்பை இந்தியன்ஸ் அணியில் ராயுடு

இதில் முக்கிய விஷயம் அம்பதி ராயுடு, ஐபிஎல் தொடரில் இருவரின் கேப்டன்சியின் கீழும் ஆடி உள்ளார். 2013 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவின் கீழ் ஆடினார் அம்பதி ராயுடு. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றியிலும் அவர் பங்கு வகித்தார்.

தோனியின் கீழ் ராயுடு

தோனியின் கீழ் ராயுடு

அடுத்து 2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி வருகிறார். அதில் தோனியின் கீழ் ஆடி வரும் அம்பதி ராயுடு 2018 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றியில் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்தார். அவர் தோனி - ரோஹித் சர்மா கேப்டன்சி பற்றி வெளிப்படையாக பேசி இருப்பது கவனத்தை பெற்றுள்ளது.

அனைவருக்கும் கேப்டன் தோனி

அனைவருக்கும் கேப்டன் தோனி

"தோனி தான் எங்கள் அனைவருக்கும் கேப்டன், ரோஹித் சர்மா, விராட் கோலி உட்பட. ரோஹித் சர்மா இப்போது என்னவாக ஆகிக் கொண்டு இருக்கிறாரோ, அதை அவர் தோனியிடம் இருந்து தான் கற்றுக் கொண்டார். தோனி எப்படி இந்திய அணிக்கு கேப்டன்சி செய்தாரோ அதைப் பார்த்து கற்றுக் கொண்டார்" என்றார் ராயுடு.

பெரிய வித்தியாசம் இல்லை

பெரிய வித்தியாசம் இல்லை

"இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. ரோஹித் சர்மா சரியான திசையில் தான் சென்று கொண்டு இருக்கிறார். தோனியின் வெற்றியை அடைவதற்கு ரோஹித் சர்மாவுக்கு நீண்ட காலம் ஆகும். ஆனால்,. அவர் அதை அடைவார்" எனவும் கூறினார் அம்பதி ராயுடு.

Story first published: Tuesday, May 5, 2020, 13:21 [IST]
Other articles published on May 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+