ஒருவழியா ஆஸ்திரேலிய பயணத்தை துவங்கியாச்சு... போட்டிகளையும் ஒரு கை பார்க்க தயாராகும் ஹிட்மேன்!
மும்பை : பிட்னசை நிரூபிப்பதற்காக கடந்த 19ம் தேதி முதல் என்சிஏவில் பயிற்சி மேற்கொண்டுவந்த துவக்க வீரர் ரோகித் சர்மா ஒருவழியாக இன்று தனது ஆஸ்திரேலிய பயணத்தை துவக்கியுள்ளார்.
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் தொடர்களில் மட்டும் இடம்பெற்றிருந்த ரோகித் சர்மா, அதிலும் இறுதி இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரோகித் சர்மா பிட்னசை நிரூபித்துள்ள போதிலும் குவாரன்டைனிற்கு பிறகு மீண்டும் சோதிக்கப்பட்டு அதற்கு பிறகே போட்டிகளில் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் 2020 தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரின் சில போட்டிகளில் பஙகேற்காத மும்பை இந்தியன்ஸ் அண கேப்டன் ரோகித் சர்மா, பிளே-ஆப் சுற்றில் பங்கேற்று தனது அணியை இறுதிப்போட்டியில் வெற்றி பெற செய்தார். மேலும் ஐபிஎல்லின் 5வது கோப்பையையும் பெற்றுத் தந்துள்ளார்.

டெஸ்ட் தொடரில் இடம்
இதனிடையே, காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களில் அவரது பெயர் இடம்பெறவில்லை. நீண்ட சர்ச்சைகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரில் இடம்பெற்றார். ஆயினும் பிட்னசை நிரூபிக்கும் கட்டாயம் ஏற்பட்டதையடுத்து அவர் என்சிஏவில் பயிற்சி மேற்கொண்டார்.

இன்று துவங்கிய ரோகித்
கடந்த 11ம் தேதி ரோகித்தின் பிட்னஸ் பரிசோதிக்கப்பட்டு, அவர் அதை நிரூபித்த நிலையில், இன்றைய தினம் ஆஸ்திரேலியாவிற்கான தனது பயணத்தை துவக்கியுள்ளார். மும்பையிலிருந்து துபாய் வழியாக அவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியை சென்றடைகிறார். மேலும் அங்கு தனது 14 நாட்கள் குவாரன்டைனை மேற்கொள்ளவுள்ளார்.

குவாரன்டைனிற்கு பிறகு முடிவு
இந்த குவாரன்டைன் காலத்தில் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் என்றும், இதையடுத்து அவர் பரிசோதிக்கப்பட்டு, தொடர்ந்து அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ முன்னதாக தெரிவித்துள்ளது.

ஜனவரி 7ல் மூன்றாவது போட்டி
நாளை மறுதினம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு பிறகு விராட் கோலி தனது குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பவுள்ள நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் ரோகித்தின் பங்கேற்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. ரோகித் பங்கேற்கவுள்ள 3வது போட்டி ஜனவரி 7ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications