Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெனைச்சா அடிக்கராரு... முழு கன்ட்ரோலும் அவர்கிட்ட இருக்கு... ஹிட்மேன் குறித்து குக் பாராட்டு

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா 161 ரன்களை குவித்துள்ளார்.

கடந்த போட்டியில் சிறப்பான துவக்கத்தை இந்திய அணிக்கு அவர் தரத் தவறியதால் பல்வேறு விமர்சனங்களை சந்தித்த நிலையில் இந்த ரன் குவிப்பு அவருக்கு பாராட்டுக்களை அளித்துள்ளது.

Rohit sharma looked absolutely world-class - Alastair Cook lauds

இந்நிலையில் ரன்களை குவிப்பதில் முழு கட்டுப்பாட்டை தன்னிடம் ரோகித் சர்மா வைத்துள்ளதாகவும் நினைத்த நேரத்தில் ரன்களை குவிப்பதாகவும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 161 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் இந்திய அணி வெற்றிப்பாதையில் நடைபோட்டு வருகிறது.

இந்நிலையில் ரோகித் சர்மா ரன் குவிப்பதில் முழு கட்டுப்பாட்டை தன்னிடம் வைத்துள்ளதாகவும் நினைத்த நேரத்தில் அவர் ரன்களை குவித்து வருவதாகவும் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக் பாராட்டு தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் இதேபோல பாலிசியை பின்பற்றியே ரன்களை குவிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Story first published: Monday, February 15, 2021, 11:40 [IST]
Other articles published on Feb 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+