For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தென்னாப்பிரிக்காவுடன் தொடரை வென்றதே இல்லை.. வரலாற்றை மாற்றுவோம்.. டாஸில் ரோகித் சவால்

கவுகாத்தி : இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று தொடங்கியது.

Recommended Video

IND vs SA 2nd T20SuryaKumar yadav உச்சக்கட்ட அதிரடி 22 பந்தில் 61 ரன்கள்

இங்கு இந்திய அணி இதுவரை 2 போட்டியில் விளையாடி இருக்கிறது. ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட, மற்றொரு ஆட்டத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.

கவுகாத்தியில் மழை பெய்து இருந்ததால், ஆடுகளம் மூடப்பட்டு இருந்தது. இதனால், ஆடுகளம் ஆட்டத்தின் பெரும்பாலான அளவில் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Road Safety World series - இந்தியா லெஜண்ட்ஸ் அணி சாம்பியன்.. ஓஜாவின் அதிரடி சதத்தால் இலங்கை தோல்விRoad Safety World series - இந்தியா லெஜண்ட்ஸ் அணி சாம்பியன்.. ஓஜாவின் அதிரடி சதத்தால் இலங்கை தோல்வி

பெவுமா நம்பிக்கை

பெவுமா நம்பிக்கை

இந்த நிலையில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீசியது. ஷாம்சி நீக்கப்பட்டு, லுங்கி நிகிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பந்துவீச்சில் முதலில் சில விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணி நிர்ணயிக்கும் ஸ்கோரை வெற்றிக்கரமாக எட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கேப்டன் பெவுமா கூறினார்.

ஆடுகளம் எப்படி

ஆடுகளம் எப்படி

இதனைத் தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா, தாங்களும் பந்துவீச தான் இருந்தோம். அடுகளம் சற்று தொடக்கத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்காது. பந்து பேட்டிற்கு வருவதில் தோய்வாக இருக்கும். இதனால் முதலில் விக்கெட்டை இழந்துவிடாமல், ரன்களை பிறகு குவிக்க வேண்டியது கட்டாயம்.

சவாலாக இருக்கும்

சவாலாக இருக்கும்

எங்கள் அணியில் இன்று மாற்றம் இல்லை. தென்னாப்பிரிக்காவுடன் டி20 தொடரை சொந்த மண்ணில் நாங்கள் வென்றது இல்லை. அதற்கு தற்போது நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இன்றைய ஆட்டம் எங்களுக்கு சவாலாக இருக்கும் என நினைக்கிறேன் என்று கூறினார். இன்றைய ஆட்டத்தில் முகமது ஷமி அல்லது சிராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ரிஷப் பண்ட், 6, தினேஷ் கார்த்திக், 7, அக்சர் பட்டேல், 8, தீபக் சாஹர், 9, அஸ்வின், 10, ஹர்சல் பட்டேல், 11,ஆர்ஸ்தீப் சிங்

Story first published: Sunday, October 2, 2022, 19:01 [IST]
Other articles published on Oct 2, 2022
English summary
Rohit sharma lost the toss but vows to win the series vs sa in guwahati தென்னாப்பிரிக்காவுடன் தொடரை வென்றதே இல்லை.. வரலாற்றை மாற்றுவோம்.. டாஸில் ரோகித் சவால்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X