“அட்றா சக்க”.. 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ப்ளேயிங் 11... ரோகித் சர்மாவின் பக்கா ஸ்கெட்ச்!
பெங்களூரு: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 தகவல் தெரியவந்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கவுள்ளது.
2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே ஒரு வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் தொடரை கைப்பற்ற முணைப்புடன் உள்ளது.

2வது டெஸ்ட்
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியாக இது நடைபெறவுள்ளது. அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனால் பிட்ச் மற்றும் பனிப்பொழிவுக்கு ஏற்றவாறு ப்ளேயிங் 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், வரலாற்றில் இந்திய அணி இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இலங்கையிடம் சொந்த மண்ணில் தோல்வியடைந்தது கிடையாது. அந்த சாதனை தக்கவைத்துக்கொள்ள பார்த்து பார்த்து வீரர்களை தேர்வு செய்துள்ளனர்.

ஓப்பனிங் யார்
ஓப்பனிங்கை பொறுத்தவரை கடந்த முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா - மயங்க் அகர்வால் ஜோடி சிறப்பாக சோபிக்கவில்லை. எனினும் அதற்காக சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு தரப்போவதில்லை எனத்தெரிகிறது. மீண்டும் ரோகித் - மயங்க் ஜோடி தான் ஓப்பனிங்கில் வாய்ப்பு பெறவிருக்கின்றனர். பேட்டிங் பிட்ச் என்பதால் அதிக ஸ்கோர் அடிக்கலாம்.

பவுலிங் தேர்வு
பவுலிங்கை பொறுத்தவரையில் ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்கிறது. இதே போல வேகப்பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி உறுதியாகியுள்ளனர். ஆனால் 5வது பவுலர் தான் வேகப்பந்துவீச்சாளரா அல்லது கூடுதல் ஸ்பின்னரா என்பது உறுதியாகவில்லை.
Recommended Video

என்ன பிரச்சினை
பெங்களூரு மைதானம் போட்டியின் முதல் 3 நாட்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகவும், கடைசி 2 நாட்கள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாகவும் செயல்படும். சிராஜுக்கு ஐபிஎல் தொடர் மூலம் பெங்களூரு மைதானம் மிகவும் பழக்கப்பட்ட ஒன்றாகும். செம்மண் பிட்ச் என்பது, அக்ஷர் பட்டேலுக்கு அதிக அனுபவம் கொண்ட ஒன்றாகும். இதனால் இவர்களில் இருந்து யாரை எடுப்பது என்பதில் மட்டும் குழப்பம் நீடிக்கிறது.


Click it and Unblock the Notifications