லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்தியா பல்வேறு யுத்திகளை வடிவமைத்து வருகிறது. இதில் ரோகித் சர்மா போட்ட பிளான் ஒன்று ராகுல் டிராவிட்டையே பிரமிக்க வைத்து இருக்கிறது.
இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் விளையாடப் போகிறார்கள் என்று அனைவருக்குமே தெரிந்திருக்கும். ஆனால் இங்கிலாந்தில் வேக பந்துவீச்சாளர்களுடைய திறன் மிகவும் முக்கியமானது.
குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்களை விட வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு தான் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த நிலையில் முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் இரண்டு வேகப்பந்துவீச்சாளராக விளையாட உள்ளனர். இதனால் மூன்றாவதாக இடது கை வேகப் பந்துவீச்சாளர் தான் இருக்க வேண்டும் என ரோகித் சர்மா வலியுறுத்தி இருக்கிறார்.

அதற்குக் காரணம் இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் இடது கை வேக பந்துவீச்சாளர் பந்தை வீசும் போது ஆப் ஸ்டெம்ப் வெளியே செல்லும். இது இடது கை பேட்ஸ்மன்களுக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தும். இதேபோன்று ஸ்டம்புக்கு இடது பக்கத்தில் இருந்து இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக அளவில் பந்து வீசுவார்கள்.
இதனால் அவர்களுடைய கால் தடம் ஆட்டத்தில் கடைசி கட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஸ்டம்புக்கு வலது பக்கத்தில் இருந்து ஓடி வருவதால் அந்தக் கால் தடங்கள் ஆடுகளத்தில் பதிந்திருக்கும். இதனை பயன்படுத்திக் கொண்டு அஸ்வின் அல்லது ஜடேஜா ஆகியோர் அந்த கால் தடத்தில் பந்து வீசினால் பந்து பயங்கரமாக திரும்பும். இதனை ஆஸ்திரேலியா வீரர்களால் கணித்து விளையாட முடியாது. இது அந்த அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். இதனால் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக உனாட்கட்டை தான் சேர்க்க வேண்டும் என ரோகித் சர்மா முடிவெடுத்துள்ளார்.
இதேபோன்று சுழற் பந்துவீச்சாளர்கள் அஸ்வின் ஜடேஜாவும் இருக்க வேண்டும் என்றும் அவர் முடிவு எடுத்துள்ளார். எனினும் உனாட்கட் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து அணிக்கு திரும்பி உள்ளதால் அவர் சிறப்பாக செயல்படுவாரா என்ற சந்தேகம் மட்டும் அணி நிர்வாகத்தில் ஏற்பட்டிருக்கிறது. எனினும் ரோஹித் சர்மாவின் இந்த ஐடியா நிச்சயமாக கிளிக் ஆகும் என அனைவரும் பாராட்டு இருக்கிறார்கள்.