Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சச்சின், கங்குலியை முந்துவாரா? ரோஹித்துக்கு செம வாய்ப்பு

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட உள்ளார்.

கடைசியாக ஆசிய கோப்பை ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு தலைமை ஏற்று வழிநடத்திச் சென்ற ரோஹித் சர்மா, தற்போது வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் அணியில் கோலியின் தலைமையின் கீழ் ஆடவுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் சச்சின் மற்றும் கங்குலியின் ஒரு சாதனையை ரோஹித் முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

புதிய சாதனை வாய்ப்பு

புதிய சாதனை வாய்ப்பு

சிக்ஸர்கள் அடிப்பதில் ரோஹித் சர்மா படுகில்லாடி. இந்திய அணியில் குறைந்த போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் ரோஹித் சர்மா தான். ஏற்கனவே, சிக்ஸர்கள் அடிப்பதில் பல சாதனைகள் புரிந்துள்ள ரோஹித் சர்மா, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 1௦ சிக்ஸர்கள் அடிக்கும் பட்சத்தில் சச்சின், கங்குலியை முந்தி புதிய சாதனை படைப்பார்.

இந்திய வீரர்களின் சிக்ஸர் பட்டியல்

இந்திய வீரர்களின் சிக்ஸர் பட்டியல்

இந்தியாவில் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வரிசையில் ரோஹித் சர்மா நான்காவது இடத்தில் இருக்கிறார். அவர் 186 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அவருக்கு முன் கங்குலி மூன்றாம் இடத்தில் 190 சிக்ஸர்களோடும், இரண்டாம் இடத்தில் சச்சின் 195 சிக்ஸர்களோடும் இருக்கின்றனர்.

10 சிக்ஸர்கள் அடிப்பாரா?

10 சிக்ஸர்கள் அடிப்பாரா?

ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பத்து சிக்ஸர்கள் அடிக்கும் பட்சத்தில் 196 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் கங்குலி மற்றும் சச்சினை முந்தி விடுவார்.

நம்பர் 1 தோனி

நம்பர் 1 தோனி

இந்திய அளவில் தோனி அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் 217 சிக்ஸர்களோடு முதல் இடத்தில் இருக்கிறார். சர்வதேச அளவில் தோனி நான்காம் இடத்திலும், ரோஹித் சர்மா ஒன்பதாவது இடத்திலும் இருக்கின்றனர். சச்சின், கங்குலி இருவரும் ஏழு மற்றும் எட்டாவது இடத்தில் இருக்கின்றனர்.

Story first published: Thursday, October 18, 2018, 17:19 [IST]
Other articles published on Oct 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+