Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பைக்கே சிக்கல்.. ரோஹித் சர்மாவிற்கு "பண்ட் பாணியில்" செக் வைக்கும் தேர்வுக்குழு.. போச்சு!

சிட்னி: இந்திய அணியின் முன்னணி வீரர் ரோஹித் சர்மாவிற்கு உலகக் கோப்பை டி 20 தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்பதே சந்தேகம் ஆகியுள்ளது.

இந்திய அணியில் விளையாடுவதற்கு என்று தேர்வுக்குழு வாரியம் நிறைய தேர்வு முறைகளை வைத்துள்ளது. காயங்கள் இல்லாத பிட்னஸ் தொடங்கி யோ யோ டெஸ்ட் வரை பல முக்கியமான சோதனைகள் செய்யப்பட்டு வீரர்கள் அணிக்குள் தேர்வு செய்யப்படுவார்கள்.

யோ யோ டெஸ்ட் என்பது இரண்டு புள்ளிகளுக்கு இடையே ஓட கூடிய மிகவும் கடினமான டெஸ்டிங் முறையாகும். இதில் வெற்றிபெற உடல் முழு பிட்னஸில் இருக்க வேண்டும்.

எப்படி இருக்க வேண்டும்

எப்படி இருக்க வேண்டும்

ரெய்னா போன்ற வீரர்கள் கூட இந்த யோ யோ டெஸ்டில் வெற்றிபெற முடியாமல் கடுமையாக கஷ்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இந்திய அணியில் எதிர்கால விக்கெட் கீப்பர் என்று கணிக்கப்பட்ட ரிஷாப் பண்ட் இதேபோல் பிட்னஸ் பிரச்சனையால் சிக்கி தவித்தார். யோ யோ டெஸ்டில் இவர் வேகமாக ஓடவில்லை என்று புகார் வைக்கப்பட்டது.

உடல் எடை

உடல் எடை

அதேபோல் இவரின் உடல் எடை அதிகமாக இருக்கிறது. உயரத்திற்கு ஏற்ற எடையை விட அதிக எடையை இவர் கொண்டு இருக்கிறார். வயிற்றில் தொப்பை இருக்கிறது என்று புகார் வைக்கப்பட்டது. இதன் காரணமாக இவர் ஒருநாள் மற்றும் டி 20 அணியில் இருந்தே நீக்கப்பட்டார்.

எப்படி

எப்படி

தற்போது இதே பிரச்சனை இந்திய வீரர் ரோஹித் சர்மாவிற்கும் ஏற்பட்டுள்ளது. இவர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அதே சமயம் இவர் உடல் எடை காரணமாகவும் அவதிப்பட்டு வருகிறார். பண்ட்டிடம் உடல் எடையை குறைத்துவிட்டு வாருங்கள் என்று பிசிசிஐ கூறி இருந்தது. தற்போது அதே விஷயத்தை ரோஹித் சர்மாவிடமும் பிசிசிஐ கூறியுள்ளது.

என்ன சொன்னது

என்ன சொன்னது

ரோஹித் சர்மா உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பிசிசிஐ தேர்வுக்குழு கூறியுள்ளது. இதன் காரணமாக இப்போது இவர் தீவிரமாக உடல் பயிற்சி செய்து வருகிறார். ரோஹித் சர்மா ஒருநாள் அணியில் இணைவதில் பிரச்சனை இல்லை. ஆனால் இவர் டி 20 அணியில் சேர்க்கப்படுவாரா என்பதுதான் கேள்வியே.இவர் ஜனவரி மாதம் நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் கலந்து கொள்வாரா என்பது கேள்வியாக உள்ளது.

சிக்கல்

சிக்கல்

இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரிலும் உடல் எடை காரணமாக இவர் புறக்கணிக்கப்பட்டால் மொத்தமாக இவர் கொஞ்சம் கொஞ்சமாக டி 20 போட்டிகளில் இருந்து விலக்கப்படுவார். சமயங்களில் இவர் இல்லாமல் கூட இந்திய அணி அடுத்த வருடம் நடக்க உள்ள உலகக் கோப்பை டி 20 தொடரில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

கஷ்டம்

கஷ்டம்

அடுத்த வருட தொடருக்கு இப்போதே அணியை தயார் செய்ய வேண்டும். ஆனால் ரோஹித் இப்படி உடல் எடையால் கஷ்டப்பட்டால் அணியில் வாய்ப்பு பெறுவது கஷ்டம். இதனால் தவான் - ராகுல் இணையுடன் இந்திய அணி டி 20 உலகக் கோப்பை போட்டிகளில் களமிறங்க வாய்ப்புள்ளது.

Story first published: Wednesday, December 9, 2020, 22:46 [IST]
Other articles published on Dec 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+